
உங்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு பற்றி தெரியுமா…?? விவசாயிகளுக்கு சலுகைகளை அள்ளி கொடுக்கும் மத்திய அரசின் அருமையான திட்டம்…!!
இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால், 1998 ஆம் ஆண்டில் இருந்து ‘கிசான் கிரெடிட் கார்டு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டமானது விவசாயிகளின் சாகுபடி மற்றும் பிற தேவைகளுக்கு, பல்வேறு வங்கி நிறுவனங்களிடமிருந்து சலுகைகளுடன் கூடிய விவசாய கடன்களை வழங்கி வருகிறது. அதாவது, இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் பெறும் கடன் தொகைக்கு 2% வட்டி மானியம் மற்றும் 3% உடனடி ஊக்கத்தொகையும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தில் பயிர் சாகுபடி, அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற காரணங்களுக்கு கடன் தொகை அளிக்கப்படுகிறது. அதேபோல், விவசாய குடும்பத்தின் நுகர்வு தேவைகள், விவசாய பராமரிப்புகள் மற்றும் விவசாயம் தொடங்குவதற்கான மூல தனம் ஆகிய காரணங்களுக்காகவும் கடன் தொகை வழங்கப்படுகிறது. மேலும், இந்த கிசான் கிரெடிட் கார்டின் செல்லுபடி காலம் ஐந்து ஆண்டுகள் எனினும், ஆண்டுக்கு ஒருமுறை இதனை புதுப்பிக்க வேண்டும்.

























