Tokyo Olympics: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை கமல் பிரீத் கவுர் இறுதிப்போட்டிக்கு தேர்வு!
டோக்கியோவில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல் பிரீத் கவுர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ல் தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 205 நாடுகளில் இருந்து 11,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியாவிலிருந்து 120 வீரர், வீராங்கனைகள் 18 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலில் 5 நாட்கள் பக்தர்களுக்கு தடை – கொரோனா எதிரொலி!
இந்நிலையில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார். வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல் பிரீத் கவுர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஆடவர் வில்வித்தை போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் அதானு தாஸ் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீரர் தகஹாரு அவருக்கு எதிராக போட்டியிட்டார்.
TN Job “FB
Group” Join Now
இந்த போட்டியில் 4க்கு 6 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்ததால், அதானு தாஸ் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் கமல் பிரீத் கவுர் 64 மீட்டர் வீசி 2ம் இடம் பிடித்தார். இதனால் அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அதே போல ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் தோல்வியடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பிய வீரரை எதிர்கொண்ட அமித் பங்கல், 1-4 புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவரும் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.