
மக்களே..நீங்களும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்டணுமா…?? இதோ முழு விவரம் உங்களுக்காக
“கலைஞரின் கனவு இல்லம் திட்டம்” முதன்முதலில் “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” என்ற பெயரில் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன், முக்கிய நோக்கமே “வருகின்ற 2030 ஆம் ஆண்டிற்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்” என்பது தான். மேலும், 2025 -2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வீடுகள் கட்ட நிர்ணயம் செய்யப்பட்டு ரூ. 3,100 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
IPL 2025 தொடர் இன்று தொடக்கம்.. நடக்கவிருக்கும் முதல் போட்டியில் ஏற்பட்ட சிக்கல்..
மேலும், இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு ரூ. 3,50,000 மானிய தொகையானது 4 தவணையாக அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. மேலும், பயனாளிகள் அவர்களின் வீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த விரும்பினால் ரூ. 1,50,000 லட்சம் கடனுதவியும் வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக, இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டை சேர்ந்த கிராமப்புறங்களில் அதிகபட்சம் 360 சதுரஅடி நிலப்பரப்பில், குடிசை அல்லது ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள், அதற்கான பட்டா வைத்திருந்தால் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























