JIOவின் ரூ.98 ரீசார்ஜ் திட்டம் மீண்டும் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜியோவின் ரூபாய் 98 ரீசார்ஜ் பிளான் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஜியோவின் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டமாகும். இது 14 நாட்கள் செல்லுபடியாகும்.
ஜியோ ரீசார்ஜ் பிளான்:
இந்தியாவில் ஜியோ நிறுவனம் மிக குறைந்த காலத்தில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நெட்ஒர்க் நிறுவனம் தொடங்கப்பட்ட போது மக்களுக்கு இலவசமாக ஜியோ சிம் கார்டுகளை வழங்கியது. மேலும் 3 மாத காலத்திற்கு கட்டணமில்லா இலவச இன்டர்நெட், வாய்ஸ் கால் போன்ற சலுகைகளை வழங்கியது. ஜியோ வந்த பிறகு மற்ற பிரபல நிறுவங்களான ஏர்டெல், ஐடியா,வோடபோன் போன்றவைகளின் பயனாளர்கள் வெகுவாக குறைந்தனர். ஜியோ நெட் ஒர்க் அவ்வப்போது தங்கள் பயனாளர்களுக்கு புதிய மலிவான ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் கால தாமதம் – மதிப்பீட்டில் தேக்கம்!
அதனை தொடர்ந்து ஜியோ போன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஜியோ போன் பயனர்களுக்கு 300 நிமிட இலவச அவுட்கோயிங் கால்களையும், ஒன்-பிளஸ்-ஒன் ரீசார்ஜ் சலுகையும் அறிமுகப்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.98 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இடையில் இந்த 98 ரீசார்ஜ் திட்டம் நீக்கப்பட்டு 129 ரீசார்ஜ் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது ஜியோவின் ரூபாய் 98 ரீசார்ஜ் பிளான் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் இப்போது குறைந்த செல்லுபடியாகும் காலத்துடன் வந்திருக்கிறது. 28 நாட்களுக்கு பதிலாக 14 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். புதிய ரூ.98 டேட்டா திட்டம் மொத்தம் 21 ஜிபி டேட்டாவை ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த பேக் ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் தொலைபேசி அழைப்புகளும், ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோக்ளவுட் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.