CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் கால தாமதம் – மதிப்பீட்டில் தேக்கம்!
CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மதிப்பீடுகளை கணக்கிடுவதில் CBSE பள்ளிகளில் சில தேக்கநிலை ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்துள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 20 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், இவை மேலும் தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தல் செயல்முறையை CBSE கல்வி வாரியம் இன்னும் இறுதி செய்யவில்லை.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் – அமைச்சர் ஆலோசனை!
அதனால் CBSE சார்ந்த பள்ளிகள் அனைத்தும் ஜூலை 17 ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கான மதிப்பீட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன் கீழ் மாணவர்களின் இறுதி மதிப்பெண்களை சமர்பிப்பதற்காக பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் வரும் சனிக்கிழமையுடன் (ஜூலை 17) முடிவடைகிறது. அந்த வகையில் அனைத்து பள்ளிகளிலும், மதிப்பெண்கள் சமர்ப்பித்தல், செயல்முறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பது குறித்து பிராந்திய இயக்குநர்கள் தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர்.
சமீபத்தில் CBSE கல்வி வாரியம் 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான முடிவுக்கான அட்டவணை சாளரத்தை திறந்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கொடுக்கப்பட்ட கால வரம்பில் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவிடும் படிக்கும், மேலும் பதிவேற்றப்பட்ட மதிப்பெண்களை கண்காணிக்குமாறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதாவது 96 முதல் 100 வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை முடிந்த அளவுக்கு குறைக்க கல்வி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
TN Job “FB
Group” Join Now
பள்ளிகள் இந்த செயல்பாடுகளை முடித்தவுடன், CBSE வாரியம் அந்த தகவல்களைக் கணக்கிட்டு இறுதி மதிப்பீடுகளை செய்யும். இந்த செயல்முறைகளை மேற்கொள்வதற்கு சில நாட்கள் கூடுதலாக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்கள் அல்லது ஒரு வாரம் காலம் தாமதமாகலாம். அதாவது குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து பள்ளிகளும் மதிப்பெண்களை சமர்ப்பித்தால் இறுதி மதிப்பெண்களை சீக்கிரத்தில் வழங்குவது சாத்தியமாகும் என கூறப்படுகிறது.