ஜனவரி 1-15 நடப்பு நிகழ்வுகள்- இந்தியா

0

இந்தியா

1.அசாமில் குடிமக்களின் தேசிய பதிவேடு வெளியீடு: முதல் வரைவுப் பட்டியலில் 1.9 கோடி பேர்

  • அசாம் மாநிலத்தின் முதல் வரைவு, குடிமக்களின் தேசிய பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவுப் பட்டியலில் 1.9 கோடி பேர் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
  • அசாம் மாநிலத்தில், பங்களாதேஷில் இருந்து ஏராளமானோர் ஊடுருவியுள்ளதாக புகார் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் பங்களாதேஷ் நாட்டவர்கள், குடும்ப அட்டை உட்பட ஆவணங்களையும் வைத்துள்ளதால், அவர்களை கண்டறியும் நடவடிக்கைகள், 1951-ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வருகிறது.
  • இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த, உச்ச நீதிமன்றம் டிசம்பர் 31-ம் தேதிக்குள், குடிமக்களின் தேசிய பதிவேட்டின் முதல் வரைவுப் பட்டியலை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

முக்கியமான குறிப்புகள்:

  1. தலைநகர் – திஸ்பூர்
  2. முதல் அமைச்சர்- சர்பானந்த சோனுவால்
  3. கவர்னர் – ஜக்திஷ்

2.வெளியுறவு செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமனம்

  • மூத்த ஐஎப்எஸ் அதிகாரியான விஜய் கேசவ் கோகலே (58) அடுத்த வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.
  • இப்போது இந்தப் பதவியில் உள்ள எஸ்.ஜெய்சங்கர் வரும் 28-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமன குழு கோகலே நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. விஜய் கேசவ் கோகலே, இப்போது வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் பிரிவு செயலாளராக உள்ளார்.

3.பெண்களுக்காக மத்திய அரசின் பிரத்யேக இணையதளம்: http://www.nari.nic.in/

  • பெண்களுக்கான அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை ஒரே தளத்தில் பார்க்க, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த இணையதளத்தை செவ்வாய்க்கிழமை அன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அறிமுகப்படுத்தி வைத்தார். இதில் பெண்கள் நலம்பெறும் வகையிலான முக்கியத் தகவல்கள் அடங்கிய சுமார் 350 திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இதன் முகப்புப் பக்கத்தில் பெண்கள் வயது அடிப்படையில் 4 பிரிவினராகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வயது, மாநிலம், எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறது என்ற தேர்வுகளின் அடிப்படையில் உதவிகள் வழங்கப்படுகின்றன.

4. பூஜ்ஜிய நேரம் & கேள்வி நேரம்

  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கேள்வி நேரத்தில் கேள்விகளை எழுப்ப 10 நாட்களுக்கு முன்பாக அவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளிக்க வேண்டும். அதேநேரம் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல் பூஜ்ஜிய நேரத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப முடியும். எனினும் அன்றைய தினம் காலை 9 மணிக்கு முன்பாக நோட்டீஸ் அளிக்க வேண்டும்.

5. தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:

  • தன்னந்தனியே எவரெஸ்ட் சிகரம் மற்றும் மலையேற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஓர் உயரதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.
  • நேபாள நாடாளுமன்றம் வியாழக்கிழமை கூடி, இமயமலை நாட்டின் மலையேற்ற ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதலை அளித்தது.

6. சபரிமலை ஐயப்பன் கோயில் பெயர் மீண்டும் மாற்றம்: திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு

  • சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயரை மீண்டும் ‘ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில்’ என மாற்றுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
  • கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில், ‘ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில்’ என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டு வந்தது. கேரளாவில் இதே பெயரில் உள்ள கோயில்களில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலையில் 10 – 50 வயது வரை உடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

7. .ஓபிசி மசோதா மக்களவையில் தாக்கல்

  • நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) உரிமைகள், சமூக நீதி உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சட்ட மசோதாவை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கென அரசியல் சாசன அந்தஸ்துடன் கூடிய ஓர் ஆணையத்தை அமைப்பது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய இனங்கள் சேர்க்கப்படுவதைத் தடுப்பது உள்ளிட்டவை இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.

8. அழகு, வெண்மை நிறத்தைப் பாதுகாக்க தினமும் 40,000 பேருக்கு மட்டும் தாஜ்மஹாலை பார்க்க அனுமதி

  • இந்திய பாரம்பரியச் சின்னமான தாஜ்மஹாலை பார்வையிட நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • உலக அதிசயங்களுள் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலை, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
  • அதிகபடியான சுற்றுலாப் பயணிகளின் வருகையின் காரணமாக, தாஜ்மஹாலின் அழகையும், அதன் வெண்மை நிறத்தையும் பராமரிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. தாஜ்மஹாலை பராமரிப்பதற்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் ஆராய்ச்சித் துறையினரும், இந்த தகவலை மத்திய அரசிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

9. கடந்த 10 மாதங்களாக பழுதாகி நிற்கும் இந்திய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ‘ஐஎன்எஸ் அரிஹந்த்’ மனிதப் பிழையால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்தக் கப்பல் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படவில்லை என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

10. 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி

  • நாடு முழுவதும் 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
  • மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இப்போது 216 பெரிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதி உள்ளது. 70 லட்சம் பேர் இதன் மூலம் இலவச இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், நாடு முழுவதும் கிராமப்புறங்கள் உட்பட 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ரூ.700 கோடியில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

11. உயர் கல்வியில் அதிகம் சேர்பவர்களின் பட்டியல்: முதலிடம் பிடித்து தமிழகம் சாதனை

  • இந்தியாவில் உயர் கல்வியில் அதிகம் சேர்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
  • அகில இந்திய அளவில், 2016 -2017 கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்ந்த மாணவ, மாணவியரின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடுமுழுவதும் 18 -23 வயது கொண்டவர்கள் உயர் கல்வியில் சேரும் அளவை கணக்கிட்டு இந்த பட்டியலில் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நேற்று (வெள்ளிக்கிழமை) இதனை நாடாளுமன்றத்தில் சமர்பித்தார்.

12. ஜனவரி 29-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்கும் நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
  • இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது:
  • “இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் நாள் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

13. ஆந்திராவில் திருநங்கைக்கு அரசுப் பணி

  • ஆந்திராவில் திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இம்மாதம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, இலவச வீட்டு மனைப் பட்டா போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்முறையாக, கடப்பா மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சிவா ஊரஃப் என்கிற ஜானகிக்கு,கட்டிடத் துறையில் டேட்டா என்ட்ரிக்கான பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கட்டிடத் துறை அதிகாரி ரகுநாதனுக்கு ஜானகி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

14. ஆதார் வைத்திருப்பவர்களுக்கு புதிய ’விர்ச்சுவல்’ அடையாள அட்டை

  • ஆதார் விவரங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், புதிய மெய் நிகர் (விர்ச்சுவல்) அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மத்திய அரசால் நாடு முழுவதும் 90 சதவீதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஆதார் அட்டையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 12 இலக்க பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

15. இஸ்ரோவின் 100-வது செயற்கைக்கோள் கார்டோசாட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

  • கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் சுமந்து சென்ற 31 செயற்கைக்கோள்களில் இஸ்ரோ தயாரித்த 100வது செயற்கைக்கோளும் ஒன்றாகும்.
  • நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், பூமியில் உள்ள இயற்கை வளங்களை ஆராய்தல், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமின்றி, வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.
  • எடை குறைந்த செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவும், எடை அதிகம் உள்ள செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவும் இஸ்ரோ விண்ணில் ஏவிவருகிறது. அந்த வகையில், 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

16. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நாடாக விளங்கும் இந்தியாவை என்எஸ்ஜி.யில் சேர்க்க நடவடிக்கை : அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் தகவல்

  • அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியாவை உறுப்பினராக சேர்க்க இதர உறுப்பு நாடுகளுடன் பேசி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  • இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு மக்களின் வளத்தைப் பொருத்தவரை, இந்திய-பசிபிக் பிராந்தியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக கொள்கைகளையும் உடைய சுதந்திரமான, வெளிப்படையான பகுதியாக இந்தப் பிராந்தியம் இருக்கவேண்டும் என இரு நாடுகளும் விரும்புகின்றன.

17. உலக தலைவர்கள் தரவரிசை பட்டியல்: பிரதமர் மோடிக்கு 3-வது இடம்

  • அதில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளார். மூன்றாவது இடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
  • நான்காவது இடத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, 5-வது இடத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், 6-வது இடத்தில் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் உள்ளனர். 7, 8 மற்றும் 9-வது இடங்களில் முறையே சவுதி, இஸ்ரேல், ஈரான் நாட்டு தலைவர்கள் உள்ளனர். பத்தாவது இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளார்

18. ராணுவ தினம்: படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

  • ராணுவ தினத்தை முன்னிட்டு படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

19. இஸ்ரேல் பிரதமரை ஆங்கில, ஹீப்ரு மொழி ட்வீட்களில் வரவேற்ற பிரதமர் மோடி

  • விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமரை கட்டித்தழுவி வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆங்கிலம் மற்றும் ஹீப்ரு மொழியில் ட்வீட் செய்தபோது, “என் நண்பரே! உங்களை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். உங்களது இந்திய வருகை வரலாற்றுபூர்வமானது, சிறப்பு வாய்ந்தது. இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை மேலும் இது வலுப்படுத்தும்” என்று ட்வீட் பதிவு செய்துள்ளார்.

20. இந்தியா – இஸ்ரேல் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • இந்தியா – இஸ்ரேல் நாடுகளிடையே இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம் உற்பத்தி உள்ளிட்டவை தொடர்பாக 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
  • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தரும் இரண்டாவது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவார்.
  • இதனைத் தொடர்ந்து, இந்தியா – இஸ்ரேல் இடையே . இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம், வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர் பாக 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

21. இந்திய,ஜப்பான் கடலோர காவல்படைகூட்டுப் பயிற்சி

  • இந்திய கடலோரக் காவல்படை மற்றும் ஜப்பான் நாட்டு கடலோரக் காவல்படை இணைந்து தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
  • இந்திய கடலோரக் காவல்படை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டு கடலோரக் காவல்படைகளுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில், 8-வது பயிற்சியாக ஜப்பான் நாட்டு கடலோரக் காவல்படையுடன் இணைந்து இந்த ஆண்டு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

22. ‘சாரக்ஸ்-18’ தேசிய கடல்சார் தேடுதல்

  • ‘சாரக்ஸ்-18’ என பெயரிடப்பட்டுள்ள தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சியும்இயற்கை சீற்றம், போர் உள்ளிட்ட சமயங்களில் கடலில் மூழ்கும் கப்பல்களில் இருப்பவர்களை எவ்வாறு உயிருடன் காப்பாற்றுவது, கப்பலில் உள்ள தளவாடங்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இடம் பெற்றுள்ளன.
  • மேலும், இப்பயிற்சியில் இந்திய கடற்படை, விமானப்படை மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் கப்பல்களும் இடம் பெறுகின்றன. இந்தக் கூட்டுப் பயிற்சியை இந்திய கடலோரக் காவல்படையின் இயக்குநர் ஜென் ரல் ராஜேந்திர சிங், ஜப்பான் கடலோரக் காவல்படையின் கமாண்டன்ட் அட்மிரல் சதோஷி நகஜிமா ஆகியோர் பார் வையிடுகின்றனர்.

முக்கியமான குறிப்புகள்

  1. ஜப்பான்தலைநகரம்–டோக்கியோ
  2. பிரதமர்- சின்சோஅபே
  3. நாணயம்-யென் (¥)
  4. சூரியன் உதிக்கும்நாடு –ஜப்பான்
  5. மொத்தம்தீவு-6852

23. 15ஆண்டுகளில் பொருளாதாரத்தில் வளர்ந்தநாடாக இந்தியா இருக்கும்:துக்ளக் விழாவில்அருண்ஜேட்லி நம்பிக்கை

  • ‘‘அடுத்த 15 ஆண்டுகளில் சமூக, பொருளாதார கட்டமைப்பில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும்’’ என்று துக்ளக் இதழ் ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
  • துக்ளக் இதழின் 48-வது ஆண்டுவிழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.இவ்விழாவில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துக்ளக் நிறுவனர் மறைந்த சோ எழுதிய,‘அன்றைய வேதங்களும் இன்றைய விவகாரங்களும்’ மற்றும் தற்போதைய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எழுதிய, ‘ரூபாய் நோட்டுக்குத் தடை’ என்பது உள்ளிட்ட 3 நூல்களை அருண் ஜேட்லி வெளியிட்டார்.

முக்கியமான குறிப்புகள்

  1. துக்ளக்இதழின்ஆசிரியர் – சுவாமிநாதன்குருமூர்த்தி

24. ராணுவதினத்தை முன்னிட்டுபோர் நினைவுச்சின்னத்தில்அஞ்சலி

  • ராணுவ தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இதை முன்னிட்டு, போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
  • இந்திய ராணுவத்தின் முதல் தளபதியாக பீல்டு மார்ஷல்கே.எம்.கரியப்பா பதவியேற்றார்.அந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி, நேற்று சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், தென் பிராந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஆர்.கே.ஆனந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
  • இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
  • (தெற்கு) துணை ஆணையர் பி.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

25. பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல்: இறுதிக்கட்ட பணியில் நிதித்துறை தீவிரம்

  • தமிழக அரசின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
  • தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.8-ம் தேதி தொடங்கியது.இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றினார்.இதில், மகளிருக்கு வழங்கப்படும் இருசக்கர வாகன மானியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
  • இந்தாண்டு, மத்திய பட்ஜெட் பிப்ரவரி முதல் தேதி கடந்தாண்டைப்போல் தாக்கல் செய்யப்படுகிறது.கடந்த முறை மார்ச்.16-ம் தேதி தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். ஆனால், இம்முறை, புதிய நிதியமைச்சரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்கூட்டியே பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

26. 100 ஆண்டுக்கு முந்தைய இலங்கை காசுகள்: சேதுக்கரையில் கண்டெடுத்த அரசுப் பள்ளி மாணவர்கள்

  • ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த காசுகளை கண்டெடுத்துள்ளனர்.

27.ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்டுகள் பாரபட்சத்தை உருவாக்கும்: உம்மன் சாண்டி கடும் கண்டனம்

  • மத்திய அரசு விநியோகிக்க திட்டமிட்டுள்ள ஆரஞ்சு நிறத்திலான பாஸ்போர்ட்டுகள், குடிமக்களிடையே பாரபட்சத்தை உருவாக்கும் என்று கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
  • பத்தாம் வகுப்பை நிறைவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர், குடியேற்ற அனுமதி சான்றிதழைப் பெற வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆரஞ்சு நிறத்திலான பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

28. இந்த ஆண்டுடன் ஹஜ் மானியம் ரத்து: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிப்பு

  • நடப்பு ஆண்டு முதல் ஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.அதேநேரம், இந்த ஆண்டில் முஸ்லிம் பெண்களின் கல்விக்காக சுமார் ரூ.700 கோடி மானிய நிதி செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முஸ்லிம்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஹஜ் புனித யாத்திரையும் ஒன்றாகும்.இந்த புனித பயணத்துக்காக மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வந்தது. சராசரியாக ஆண்டுக்கு ரூ.650 கோடி முதல் ரூ.700 கோடியை மத்திய அரசு மானியமாக ஒதுக் கியது

29. ரயில்வே உணவக ஊழல் வழக்கு: லாலுவின் மருமகனுக்கு அமலாக்கத் துறை சம்மன்

  • ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது நடந்த ரயில்வே உணவக ஊழல் வழக்கில் அவரது மருமகன் ராகுல் யாதவுக்கு அமலாக்கத் துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.

30. சுகோய் 30 ரக போர் விமானத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயணம்

  • சுகோய் 30 ரக போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயணம் செய்தார்.
  • ராணுவம், விமானப்படை, கடற்படையின் செயல்பாடுகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்து வருகிறார்.ஐஎன்எஸ் விக்ரமாதித்தியா போர்க் கப்பலில் சமீபத்தில் பயணம் செய்தார்.
  • இதை தொடர்ந்து, இந்திய விமானப்படையின் சுகோய் 30 ரக ஜெட் விமானத்தில் இன்று பயணம் செய்தார்.
  • ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து 30 நிமிடங்கள் வரை அவர் பயணம் செய்தார்.இதன் மூலம் சூப்பர்சோனிக் ஜெட் போர் விமானத்தில் பயணம் செய்த முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

31. குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

  • இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குஜராத்தில் சபர்மதி ஆஸ்திரமத்தை பார்வையிட்டதுடன், ஐ கிரியேட் மையத்தையும் தொடங்கி வைத்தார்.

ஜனவரி 1-15 நடப்பு நிகழ்வுகள்- இந்தியா PDF வடிவம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!