ஜனவரி 1-15 நடப்பு நிகழ்வுகள் – உலகம்

0

உலகம்

1. அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் அருணா மில்லர் போட்டி

 • அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் அருணா மில்லர் (வயது 53) போட்டியிடுகிறார்.
 • அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில், மேரிலாண்ட் பகுதி எம்.பியாக இருந்து வரும் ஜனநாயகக் கட்சியின் ஜான் டிலேனே பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு ஜூ்ன் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜான் அறிவித்துள்ளார். இதையடுத்து, அந்த இடத்திற்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லர் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மேரிலாண்ட் மாகாண கீழ்சபை உறுப்பினராக தற்போது உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு முதல் அந்த பதவியில் உள்ளார்.

2. அமெரிக்கா – மெக்சிகோ எல்லைச் சுவரை விரிவுபடுத்த 18 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ட்ரம்ப்

 • அமெரிக்கா மெக்சிகோ இடையே எல்லைச் சுவரை விரிவுபடுத்த சுமார் 18 பில்லியன் டாலர்களை 10 ஆண்டுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலீடு செய்ய இருக்கிறார்.
 • அமெரிக்கா மெக்சிகோவிக்கு இடையேயான எல்லை ஓரத்தில் சுமார் 1,552 கிலோமீட்டர்களுக்கு இந்த சுவர் எழுப்படவுள்ளது. இதற்கான பணி 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

3. பிரதமர் நரேந்திர மோடிக்கு கடல் நீர் சுத்திகரிப்பு வாகனம்: இஸ்ரேல் பிரதமர் பரிசளிக்க திட்டம்

 • தமது இந்திய சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடல் நீரை குடிநீராக்கும் வாகனத்தை பரிசாக வழங்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார்.
 • இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஓல்கா கடற்கரையில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து நரேந்திர மோடி பார்வையிட்டார். கடல் நீரை குடிநீராக்கும் ஜீப்பில் பயணம் செய்தபடியே, அவர்கள் அந்த சுத்திகரிப்பு நிலையத்தை பார்வை யிட்டனர்.

4. முதல் “ப்ளூ மூன்”: ஜனவரி 31-ம் தேதி 150 ஆண்டுகளின் அரிதான முழு சந்திர கிரகணம்

 • மாதத்தின் 2-வது பவுர்ணமி தினத்தன்று 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழுமுற்று சந்திர கிரகணம் இம்மாதம் 31-ம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ‘நீல நிலா’ (ப்ளூ மூன்) என்று அழைக்கப்படுகிறது.
 • 2018-ன் முதல் சந்திரகிரகணம் இது. இந்தியத் துணைக்கண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை இந்த கிரகணம் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளது.
 • ஜனவரி 31- ம் தேதி நள்ளிரவில் இந்த முழு சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் அப்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.
 • இந்தியா – இஸ்ரேல் ஏவுகணை ஒப்பந்தம் ரத்துஇஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகளை வாங்குவதற்காக சுமார் ரூ.3,100 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் வருத்தம் தெரிவித்துள்ளது.

5. பீரங்கிகளை தகர்க்கவல்ல “ஸ்பைக்ஸ்” ரக ஏவுகணைகளை இஸ்ரேலிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்தது. இதற்காக, இஸ்ரேல் அரசின் ஆயுதத் தளவாட நிறுவனமான ரபேலுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சுமார் ரூ.3,100 கோடிக்கு அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துவிட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

6. பெரூவில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்

 • பெரூ நாட்டில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்டது.
 • ரிக்டர் அளவுகோலில் 7.3 என்று இந்த் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பெரூ கடற்கரை ஊர்கள் சிலவற்றுக்கும், சிலிக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பிற்பாடு பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.
 • இந்த நிலநடுக்கத்தின் மையம் அகாரியிலிருந்து தென் தென்மேற்காக 42 கிமீ தொலைவில் இருந்தது. 12.1கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

7. காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.288 கோடி நிதியுதவி: இலங்கைக்கு இந்தியா வழங்கியது

 • காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா ரூ.288 கோடி நிதியுதவியை இலங்கைக்கு வழங்கி யுள்ளது.
 • இதுதொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கையின் நிதி மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி வளர்ச்சி வங்கி கடந்த 10-ம் தேதி கையெழுத்திட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

8. முதன்முறையாக சவுதியில் பெண்களுக்கான கார் விற்பனையகம் தொடக்கம்

 • சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கான கார் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.
 • சவுதி அரேபியாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் ஓட்டுவதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய மதக் கோட்பாட்டின் அடிப்படையில், இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனிடையே, சவுதியின் புதிய மன்னராக பொறுப்பேற்ற முகமது சல்மான், பெண்கள், வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த செப்டம்பர் மாதம் நீக்கினார். மன்னரின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான உலக நாடுகள் பாராட்டு தெரிவித்தன.

9. மியான்மரில் மிதமான நிலநடுக்கம்: 5.3-ஆக பதிவு

 • மியான்மரில் இன்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிகடர் அளவுகோலில் 5.3-ஆக பதிவாகியது.
 • இதுகுறித்து மியான்மர் தரப்பில், மியான்மரின் போகோ மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மிதமான நிநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிகடர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கம் பூமிக்கடியில் 27 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்க அதிர்வு யாங்கான், தவான்கோ, பையூ, ஆகிய இடங்களில் உணரப்பட்டது” என்று கூறப்பட்டது.

10.ஹோண்டூராஸில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

 • மத்திய அமெரிக்க நாடுகளான  ஹோண்டூராஸ், கேமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6-ஆக பதிவாகியது.
 • இதனைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 • இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தரப்பில், ” மத்திய அமெரிக்க நாடுகளான  ஹோண்டுரஸ், கேமன் தீவுகள் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

11.இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் இங்கிலாந்து அமைச்சரானார்

 • இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் இங்கிலாந்தில் அமைச்சராகியுள்ளார். இதுபோலேவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு எம்.பியான சுயிலா  பெர்னாண்டஸூம் அமைச்சர் பதவி ஏற்றுள்ளார்.
 • இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த தெரஸா மே பிரதமராக உள்ளார். இவர் தனது அமைச்சரவையை நேற்று மாற்றி அமைத்தார். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகனும், யங்காஷர் எம்.பியுமான ரிஷி சுனக் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

12.குளிர்கால ஒலிம்பிக் போட்டி: வடகொரியா பங்கேற்பு

 • தென்கொரியாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எங்கள் நாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
 • மேலும் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வடகொரியா வீரர்களுடன் அவர்கள் நாட்டைச் சேர்ந்த குழுவும் அனுப்பப்படும் என்றும்  வடகொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

13.எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை: இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி

 • எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வலியுறுத்தும் விதிமுறை மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

14. ஈரானில் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கத் தடை

 • ஈரானில் ஆராம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 • ஆரம்பக் கல்வியில் பிற மொழிகளை உட்புகுத்துவது கலாச்சார ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் என்று இஸ்லாமிய மத தலைவர்கள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 1-15 நடப்பு நிகழ்வுகள் – உலகம் PDF வடிவம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!