பெண்களே..இனி செலவே இல்லாம பிரசவம் பார்க்கலாம்… இந்த மத்திய அரசின் திட்டத்தில் இவ்ளோ சலுகைகளா..??
மத்திய அரசு பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில், தற்போது மத்திய அரசின் ‘ஜனனி ஷிஷு சுரஷா காரியக்ரம்’ திட்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சிசேரியன் உட்பட இலவச பிரசவம், தாய் மற்றும் பிறந்த குழந்தைக்கு 48 மணி நேரத்திற்குள் அத்தியாவசிய பராமரிப்பு வழங்கப்படுகிறது.
சென்னை பேருந்துகளுக்கு இனி புது ரூல்ஸ்…!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்…!!
மேலும், இத்திட்டத்தில் மருந்துகள், நுகர்பொருட்கள், பிறந்தவுடன் குழந்தைக்கு முழு உடல் பரிசோதனை, உணவு, வீட்டிலிருந்து சுகாதார நிலையத்திற்கு போக்குவரத்து வசதி, இரத்தம் வழங்குதல் ஆகிய வசதிகள் இலவசமாக செய்து தரப்படுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள் அரசு சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
























