IOB வங்கியில் Apprentices வேலைவாய்ப்பு – 700+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprentices பணிக்கென காலியாக உள்ள 750 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Indian Overseas Bank காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprentices பணிக்கென காலியாக உள்ள 750 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Apprentices கல்வி தகுதி:
Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Overseas Bank வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 முதல் அதிகபட்ச வயதானது 28 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை – 50+ காலிப்பணியிடங்கள்!
Apprentices ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.15,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
Indian Overseas Bank தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Examination மற்றும் Local Language Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



























