இந்தியன் சூப்பர் லீக் 2024-25: போராடி போட்டியை டிரா செய்த கேரளா அணி!!
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (செப்டம்பர் 29) நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனாலும் முதல் பாதி முடிவில் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் சமநிலையில் இருந்தது.
Today Petrol Price: தொடர்ந்து ஏமாற்றத்தை அளிக்கும் பெட்ரோல்..|| “இன்றைய விலை நிலவரம் உள்ளே”…!!
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் அலாதீன் அஜாரை ஒரு கோலை பதிவு செய்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் கேரளா வீரர் நோவா சதாவ்ய் கோல் ஒன்றை அடித்தார். இதன் காரணமாக இப்போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.
























