ISL 2024: 1 கோல் வித்தியாசத்தில் கோவா வெற்றி.. ஈஸ்ட் பெங்கால் அணி சொதப்பல்!!
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க போராடினர். அதன்படி ஆட்டத்தின் 13வது மற்றும் 20வது நிமிடங்களில் கோவா அணியின் போர்ஜா ஹெர்ரேரா கோல் அடித்து அசத்தினார்.
சென்னையில் ரெஸ்ட் எடுக்கும் பெட்ரோல், டீசல் …!! ” விலை குறைக்குமா அரசு”..??
இதற்கிடையில் ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் மதிஹ் தலால் ஒரு கோலை பதிவு செய்தார். ஆனாலும் முதல் பாதி முடிவில் கோவா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் கோவா வீரர் போர்ஜா ஹெர்ரேரா ஒரு கோல் அடிக்க, 81வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை சேர்ந்த டேவிட் தனது பங்கிற்கு ஒரு கோலை பதிவு செய்தார். ஆனாலும் இப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது.


























