
மதுரையில் 144 தடை உத்தரவுக்கு இது தான் காரணமா..? நீதிமன்றத்தில் அதிரடியாக விளக்கம் அளித்த தமிழக அரசு..!!
மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கடந்த சில நாட்களுக்காகவே இந்து மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தினருக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இஸ்லாமிய மதத்தினரை எதிர்த்து, இந்து மதத்தினர் போராட்டம் நடத்த போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதனை தடுத்து நிறுத்தவும், மதுரையில் எவ்வித அசம்பாவிதங்களும் நடந்துவிட கூடாது என்பதற்காகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்நிலையில், 144 தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
தனிநபர் கடன், தொழிற் கடன் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா..? அப்போ முதல அத தெரிஞ்சுக்கோங்க…!!
அதாவது, திருப்பரங்குன்றம் கோவிலில் விழா காலம் என்பதாலும், அதே போன்று மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை மதுரையில் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் 144 தடை உத்தரவு போடப்பட்டதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.























