தனிநபர் கடன், தொழிற் கடன் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா..? அப்போ முதல அத தெரிஞ்சுக்கோங்க…!!

0
??????? ????, ?????? ???? ???????????? ???? ??????????? ????????..? ????? ???? ?? ???????????????...!!
தனிநபர் கடன், தொழிற் கடன் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா..? அப்போ முதல அத தெரிஞ்சுக்கோங்க...!!

தனிநபர் கடன், தொழிற் கடன் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா..? அப்போ முதல அத தெரிஞ்சுக்கோங்க…!!

 

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பண தேவை என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. மேலும், எதிர்பாராத தேவைகளை நிர்வகிக்க பலர்  தனிநபர் கடனை தேர்வு செய்கின்றனர். இதுவே வணிகத்தை மேம்படுத்தவோ அல்லது விரிவாக்கம் செய்யவோ விரும்புபவர்கள்,  தொழிற் கடனை பெறுகின்றனர். இந்நிலையில் வணிக கடன் மற்றும் தனிநபர் கடன்கள் இந்த இரண்டிற்குமான வேறுபாடுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

 

UGC NET Dec 2024 தேர்வர்களின் கவனத்திற்கு –  தேர்வு முடிவுகள் குறித்த முழு விவரங்கள் உள்ளே..!!

அதாவது, “தொழில் முனைவோருக்கு அவர்களது தொழில் சார்ந்த உபகரணங்கள் வாங்குதல், தொழில் விரிவாக்கம் அல்லது பணி மூலதனம் உள்ளிட்ட நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தொழில் கடன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு தனிநபரின் திருமணச் செலவுகள், கல்வி, மருத்துவ அவசரம் போன்ற அத்தியாவசிய செலவுகளை நிவர்த்தி செய்ய தனிநபர் கடன்கள் உதவுகின்றன”. இந்த வணிக கடன்கள் பெரும்பாலும், “வளர்ச்சிப் பாதையில் செல்லும் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களில் வங்கியால் வழங்கப்படுகின்றன”. மேலும், வணிகக் கடன் பெற முடியாதோர் தனது வணிகத் தேவைகளுக்காக, தனிநபர் கடனைப் பயன்படுத்த முடியும்.  இருப்பினும் “தொழில் நோக்கங்களுக்காக வாங்கும் தனிநபர் கடன்களுக்கு அதிக வட்டி விகிதம் செலுத்த வேண்டும்”. மேலும், தொழிற் கடன்களுடன் ஒப்பிடும்போது, தனிநபர் கடன்கள் உடனடியாக வழங்கப்படுகின்றன என்பதால் “உங்கள் உடனடி தேவைகளை நிவர்த்தி செய்ய சிறந்த வழி தனிநபர் கடன் தேர்வு செய்வதாகும்” என்று நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!