இன்று மழைக்கு வாய்ப்பா ? – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதற்கு முன்னெச்சரிக்கையாக, அரசு அதிகாரிகள் அனைவரும் மீட்புப் பணிகளை செயல்படுத்தி வந்தனர். ஏற்கெனவே, தமிழ்நாட்டிற்கு வானிலை அறிக்கை மையம் ‘மஞ்சள் அலர்ட்’ விடப்பட்டிருந்த நிலையில் இப்போது தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்துள்ளது.
7 மாவட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு ..!! ” கல்வித்துறை உத்தரவு..!!

மேலும், கேரளாவில் 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள் அலர்ட்’ கொடுத்துள்ளது மற்றும் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்கண்ட் பகுதிகளில் குறைவான காற்றழுத்த நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசைகளில் நகர்ந்து சென்று இந்த காற்றழுத்த பகுதி வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
























