7 மாவட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு ..!! ” கல்வித்துறை உத்தரவு..!!
கேரள மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் டியூஷன் மையங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது..
7 மாவட்டங்களின் பட்டியல்:
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக கேரளாவுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, வயநாட்டில் நிகழ்ந்த கோர நிலச்சரிவின் மீட்பு பணிகள் முடிவடையாத நிலையில், 7 மாவட்ட பள்ளி கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்டங்களின் ஆட்சியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆடிப்பெருக்கன்று மின்தடை..!!! மக்களே அலர்ட்…!!
அதாவது, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட கோர நிலச்சரிவால் அங்கு சுற்றியுள்ள பகுதிகளான திருச்சூர், மலபுரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
























