IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- சம்பளத்தில் வேலை – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

0
IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- சம்பளத்தில் வேலை - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

மத்திய அரசின் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான IRCON-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Chief General Manager (Civil) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,18,200/- மாத ஊதியமாக வழங்கப்படவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IRCON
பணியின் பெயர் Chief General Manager (Civil)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.05.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

IRCON காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Chief General Manager (Civil) பணிக்கென 02 பணியிடங்கள் IRCON நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Chief General Manager பணிக்கான தகுதி:

Chief General Manager (Civil) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்களில் SAG / NFSAG Scale கீழ்வரும் IRSE Officer பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஜியோ பயனர்களுக்கு அடித்த ஜாக்பாட் – இனி எல்லாமே அன்லிமிடெட் தான்!

Chief General Manager வயது வரம்பு:

இந்த IRCON நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 56 முதல் 58 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Chief General Manager சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Pay Matrix Level – 14 என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

IRCON தேர்வு செய்யும் முறை:

Chief General Manager (Civil) பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

IRCON விண்ணப்பிக்கும் முறை:

இந்த IRCON நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.05.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!