
இந்திய ரயில்வே பொது டிக்கெட் முன்பதிவு விதிகளில் புதிய மாற்றம்..!! இதை பற்றி தெரியாம இனி ரயில் பயணம் செய்யாதீங்க..!!
இந்திய ரயில்வே கோடிக்கணக்கான பயணிகளின் முக்கிய போக்குவரத்து முறையாக திகழ்கிறது. இதில் முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயண விருப்பங்கள் என இரு பிரிவுகள் உள்ளது. இந்த முன் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் முறையானது பொது பெட்டிகளில் பிரயாணம் செய்யும் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. ஏனெனில் பயணிகள் ரயில் நிலையத்தில் பொது டிக்கெட்டுகளை வாங்கி எந்த ரயிலிலும் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஏற முடியும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் பயணத்தால் கூட்ட நெரிசல் அதிகமாகிறது. எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி பொது டிக்கெட் முறையை சீரமைக்க குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
PhonePe அறிவித்த ஒரு அசத்தலான ஆஃபர்…பயனாளர்கள் இலவச சிலிண்டர் பரிசாக பெறலாம்…முழு விவரங்கள் இதோ
அதாவது, பொது டிக்கெட் வைத்திருப்பவர்கள் அவசர காலத்தில் ஒரு ரயில் இருந்து வேறொரு ரயிலுக்கு மாறலாம். ஆனால் புதிய விதியின் கீழ், “ஒரு ரயில் ஒரு டிக்கெட்டுக்கு ஒதுக்கப்பட்டவுடன், பயணிகள் அந்த குறிப்பிட்ட ரயிலில் மட்டுமே பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதையும், ரயில் நிலையங்களில் கடைசி நிமிட நெரிசலைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், ரயில்வே விதிமுறைகளின்படி, ஒரு பொது டிக்கெட் வாங்கிய நேரத்திலிருந்து அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் பயணம் தொடங்கப்படாவிட்டால், டிக்கெட் செல்லாததாகிவிடும்”. இந்த புதிய விதிகள் குறித்து ரயில்வே அமைச்சகம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























