IPL 2025: KKR vs RR முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா.. டி காக்கின் அதிரடி ஆட்டத்தால் தடுமாறிய ராஜஸ்தான்..

0
IPL 2025: KKR vs RR ????? ???????? ????? ??????? ?????????.. ?? ???????? ?????? ?????????? ???????? ?????????..
IPL 2025: KKR vs RR முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா.. டி காக்கின் அதிரடி ஆட்டத்தால் தடுமாறிய ராஜஸ்தான்..

IPL 2025: KKR vs RR முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா.. டி காக்கின் அதிரடி ஆட்டத்தால் தடுமாறிய ராஜஸ்தான்..

2025 ஆம் ஆண்டுக்கான IPL சீசனின் 6-வது லீக் போட்டியானது நேற்று (26-03-2025) அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. மேலும், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே முதலில் பவுலிங்யை தேர்வு செய்தார். அதன்படி, “முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றி பெற்றது”.

மக்களே..உங்களுக்கு “தங்க பத்திர சேமிப்பு திட்டம்” பற்றி தெரியுமா…?? முழு விவரங்கள் இதோ உங்களுக்காக

இப்போட்டியில் “ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய துருவ் ஜுரேல் 33, ஜெய்ஸ்வால் 29, ரியான் பராக் 25 மற்றும் சஞ்சு சாம்சன் 13 ரன்கள் எடுத்தனர். இதை தொடர்ந்து, கொல்கத்தா அணிக்காக விளையாடிய டி காக் 97 மற்றும் ரகுவன்ஷி 22 ரன்கள் குவித்தனர். மேலும், கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தி தங்களது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினர்”. இதன்மூலம் நடப்பாண்டிற்கான IPL தொடரில் கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மறுபுறம் ராஜஸ்தான் அணி இந்த சீசனில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!