
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான கல்வி நிதி நிறுத்தம்…!! மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம்
மத்திய அரசு “பிஎம் ஸ்ரீ திட்டத்தின்” கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட “மும்மொழி கல்வி கொள்கையை” அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. ஆனால், 25 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் இந்த மும்மொழி கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், மத்திய அரசு இந்த மூன்று மாநிலங்களுக்கான கல்வி நிதியை (SSA) விடுவிக்காமல், வஞ்சித்து வருவதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கணடனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், “பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான கல்வி நிதியை விடுவிக்காதது நியாயமற்றது” என நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், “தமிழ்நாட்டிற்கு 2,152 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ. 1,000 கோடியும் மற்றும் கேரளாவிற்கு ரூ. 859 கோடியும் கல்வி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளது. எனவே, “இதற்கு பேச்சுவார்த்தை நடத்தி, இந்த மாநிலங்களுக்கான நிலுவை தொகையை விரைவில் விடுவிக்குமாறு” மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.























