
மக்களே..உங்களுக்கு “தங்க பத்திர சேமிப்பு திட்டம்” பற்றி தெரியுமா…?? முழு விவரங்கள் இதோ உங்களுக்காக
பொதுவாக, சேமித்த பணத்தை முதலீடு செய்வதற்கு, தங்கம் வாங்குவதையே பெரும்பாலானோர் முதலில் தேர்வு செய்கிறார்கள். அவ்வாறு முதலீடு செய்வதற்கு, “தங்க முதலீட்டு திட்டம்” ஒரு சிறந்த திட்டமாகும். ஆனால், மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தங்க முதலீட்டு திட்டம் குறித்த புரிதல் உங்களுக்கு இல்லையென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். அதாவது, இத்திட்டம் இந்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்டது ஆகும். மேலும், இது நேரடியாக தங்க நகைகள் வாங்குவதை குறைத்து, பத்திரம் வைத்து நகை வாங்குவதன் மூலம் நாட்டில் தங்கத்தின் இறக்குமதி செலவு குறையும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதாகும்.
Today Gold Rate: இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்னைக்கு கோல்ட் ரேட் எவ்ளோன்னு தெரியுமா…??
மேலும், இதில் முதலீட்டாளர்கள் தங்க பத்திரம் சேமிப்பு திட்டத்தின் பத்திரத்தினை பெற்று வங்கி, அஞ்சல் அலுவலகம், பங்கு சந்தைகள் மூலமாக முதலீடு செய்யலாம். மேலும், இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக 1 கிராம் மற்றும் அதிகபட்ச முதலீடாக 4 கிலோ கிராம் தங்கம் வரை முதலீடு செய்யலாம். குறிப்பாக, இத்திட்டத்தில் ஒவ்வொரு அரையாண்டிற்கும் 2.5% வட்டி விகிதமானது, முதிர்வு காலமான 8 வருடம் வரை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த தங்க சேமிப்பு பத்திரத்தினை சந்தையில் விற்கப்படும் தங்கத்தின் விலையை விட ரூ. 50 குறைவாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும், இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள வங்கிகளுக்கு சென்று, முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

























