
Today Gold Rate: இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்னைக்கு கோல்ட் ரேட் எவ்ளோன்னு தெரியுமா…??
இந்தியாவில் அதிக தங்க ஆபரணங்கள் வாங்கி பயன்படுத்தும் மக்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கத்தின் விலையானது அதிர்ச்சி தரும் விதமாக, மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் சாமானிய மக்கள் நகைகள் வாங்க யோசிக்கின்றனர். அந்தவகையில், இன்று (27.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து 1 சவரன் ரூ. 65,880 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,11,000 ஆகவும், 1 கிராம் ரூ. 111 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.























