IPL 2024: CSK அணியில் வெளியேற்றப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் – முழு விவரம்!

0
IPL 2024: CSK அணியில் வெளியேற்றப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் - முழு விவரம்!
IPL 2024: CSK அணியில் வெளியேற்றப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் - முழு விவரம்!
IPL 2024: CSK அணியில் வெளியேற்றப்பட்ட மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் – முழு விவரம்!

2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வீரர்களின் விவரங்கள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் ஏலம்

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் வீரர்களை டிரேடிங் செய்ய டிசம்பர் 13 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீரர்களை தக்க வைத்து கொள்ளவும், வெளியேற்றவும் நேற்று முன்தினம் கடைசி நாளாக இருந்தது. அதில் சிஎஸ்கே அணியில் வெளியேற்றிய வீரர்கள் மற்றும் தக்க வைத்துள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் எம்எஸ் தோனி இருப்பாரா என்பது குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து இருந்த நிலையில், அவர் பங்கேற்பார் என மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

அதே போல டிவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷேக் ரஷித், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மொயின் அலி, நிஷந்த் சிந்து, அஜய் மெந்தால், ராஜ்வர்தன், தீபக் சஹார், மகீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி, பிரசாந்த் சோலங்கி, சமர்ஜித் சிங், துஷர் தேஷ்பண்டே, மதீஷ பதிரனா ஆகிய வீரர்கள் தக்கவைக்கப் பட்டுள்ளனர். மேலும் பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, டுவைன் பிரிடோரியஸ், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங், கைல் ஜேமிசன், சிசாண்டா மகாலா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!