
சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2023 – கால அவகாசம் நீட்டிப்பு || கல்வி, வயது… விவரங்கள் இதோ!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Faculty (Risk Management) பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு 03.10.2023 அன்று வரை விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
IOB Faculty வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
- Faculty (Risk Management) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
- ஏதேனும் ஒரு Post Graduate டிகிரியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்களில் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் 60 வயது முதல் 65 வயதிற்குள் உள்ளவராக இருப்பது போதுமானது ஆகும்.
- ரூ.60,000/- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
- Personal Interview வாயிலாக இந்த பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- இந்த IOB வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள https://www.iob.in/Careers என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கென குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- 03.10.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.