Jio வாடிக்கையாளர்களுக்கான சூப்பர் திட்டங்கள் – மிக குறைந்த விலையில் அறிமுகம்!
இந்தியாவில் அதிகமான மக்கள் பயன்படுத்த கூடிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சலுகைகளை ஒவ்வொரு நாளும் வழங்கி வருகிறது. இதே போல் தற்போது புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜியோ நிறுவனம்:
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் மிக விரைவான வளர்ச்சியை எட்டி வருகிறது. தற்போது அனைத்து தேவைகளையும் மக்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்து வருகின்றனர். தற்போது ஜியோ நிறுவனம் அனைத்து மக்களும் பயன்படுத்தும் விதமாக பல சலுகை ரீசார்ஜ் பேக்கை அறிமுகம் செய்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஜியோ சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது ஜியோ நிறுவனம் ரூ.2,999 க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினமும் 2.5 GB வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி 365 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தவிர 100 sms, அன்லிமிடெட் கால்ஸ் உட்பட பல நன்மைகளை வழங்குகிறது. இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை பயன்படுத்தும் பயனலாளர்களுக்கு Ajio, Netmeds, Ixigo, Reliance Digital மற்றும் Jio Saavn Pro ஆகியவற்றின் கூப்பன்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பயனுள்ள திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் பலன்கள் குறித்து விரிவாக காண்போம்.
ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்: ஜியோ நிறுவனத்தின் ரூ.750க்கான திட்டம் தற்போது ரூ.749 க்கு கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் உட்பட பல நன்மைகள் உள்ளன. இதற்கான வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
சென்னை: இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்: ஜியோவின் ரூ.299க்கான திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் உட்பட 100 எஸ்.எம்.எஸ் கள், ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்ற சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்: ஜியோவின் ரூ.249க்கான திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் உட்பட 100 எஸ்.எம்.எஸ் கள், ஜியோ சினிமா, ஜியோ டிவி சலுகைகளுடன் வேலிடிட்டி 23 நாட்கள் வழங்குகிறது.
ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்: ஜியோவின் ரூ.533க்கான திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் உட்பட 100 எஸ்.எம்.எஸ் கள், ஜியோ சினிமா, ஜியோ டிவி சலுகைகளை வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்