புது அப்டேட்களால் பயனர்களை திணறடிக்கும் இன்ஸ்டாகிராம் – சூப்பர் அம்சங்கள்!

0
புது அப்டேட்களால் பயனர்களை திணறடிக்கும் இன்ஸ்டாகிராம் - சூப்பர் அம்சங்கள்!
புது அப்டேட்களால் பயனர்களை திணறடிக்கும் இன்ஸ்டாகிராம் - சூப்பர் அம்சங்கள்!
புது அப்டேட்களால் பயனர்களை திணறடிக்கும் இன்ஸ்டாகிராம் – சூப்பர் அம்சங்கள்!

உலக அளவில் அதிக பயனர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் Instagram சமீபத்தில் புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு பயனர்களை கவரத் தொடங்கியுள்ளது. இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Instagram அப்டேட்:

Instagram செயலி முன்னதாக புகைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட சிறப்புமிக்க செயலியாக செயல்பட்டு வந்தது. ஆனால் நாளடைவில் புதுப்புது அப்டேட்டுகள் வெளியாகி அனைத்துவித பயனர்களையும் கவரும் வகையில் செயல்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொசேரி சமீபத்தில Instagram அப்டேட் குறித்த முக்கிய தகவல்கள் பலவற்றையும் தெரிவித்துள்ளார். அவற்றில் பொது கணக்குகளைக் கொண்ட பயனாளிகள் தங்களின் எந்த போஸ்டில் இருந்தும் தாங்கள் விரும்பும் கமெண்ட்களை ஸ்டோரிகளில் ஷேர் செய்ய அனுமதிக்கும்.

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதார் இணைப்பு கட்டாயம் – அஞ்சல் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!

இந்த அம்சம் கவனிக்கத்தக்க அல்லது முக்கியமான கமெண்ட்களை குறிப்பிட்டு காட்டுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கமெண்ட்களை ஸ்வைப் செய்து ஷேர் ஸ்டோரி என்பதை தேர்வு செய்வதன் மூலம் செயல்படுத்தலாம். இதே போல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நோட்ஸ் அப்டேட்டில் புதிதாக நண்பர்களுடன் ஆடியோ குறிப்புகளை பகிர்ந்து கொள்ளும் அம்சம் வரவுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதே போல் இன்ஸ்டாகிராமில் ரீல்கள் 10 நிமிடம் வரை நீட்டிக்க படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரீல்கள் 3 நிமிடங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் தற்போது சோதனை முறையில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!