வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு மீண்டும் எதிர்ப்பு.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதிவான வழக்கு..!!

0
????? ????? ?????? ??????? ??????????? ???????? ?????????.. ?????? ??????? ???????? ???? ???????? ?????????????????? ?????? ??????..!!
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு மீண்டும் எதிர்ப்பு.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதிவான வழக்கு..!!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு மீண்டும் எதிர்ப்பு.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதிவான வழக்கு..!!

வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்த போது எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்தன. இதனால் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு, வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதி அனுமதி அளித்த நிலையில் அந்த மசோதா சட்டமாகியது. இந்நிலையில் இந்த மசோதா குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

TANUVAS பல்கலைக்கழகத்தில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

அதாவது, கடும் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக பலதரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் “நேற்று (06-04-2025) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று (07-04-2025) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நேரடியாக ஆஜராகி வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார்”.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!