“சாம்பியன்ஸ் டிராபி 2025 ன் இந்திய அணி அறிவிப்பு…!! ” பி.சி.சி.ஐ வெளியிட்ட அதிரடி தகவல்…!!
2025 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களின் வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்ட நிலையில் இந்திய அணி மட்டும் பெயர் பட்டியலை வெளியிடாததால் கடந்த ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி கால அவகாசம் கொடுத்திருந்தது.
இந்நிலையில், ஒரு வார கால தாமதத்திற்கு பின் பி.சி.சி.ஐ இன்று (18.01.2025) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பெயர் பட்டியலில், ரோகித் சர்மா கேப்டனாகவும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும், பல்வேறு விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் கடந்து ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டு வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நீண்ட நாட்களுக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டு வந்த முகமது ஷமி ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளார்.


























