
“என்னது இனிமேல் கருப்பு மையால் எழுதிய காசோலை செல்லாதா…?? “ஆர்பிஐ வெளியிட்ட புதிய விதியால் மக்கள் அதிர்ச்சி…!!
இந்தியாவில் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில் பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளுக்கு மக்கள் காசோலையே தேர்வு செய்கின்றனர். மேலும், காசோலைகள் மூலம் வங்கிகளுக்கு பணம் செலுத்தும் போது, பணம் செலுத்துபவரின் பெயர் மற்றும் தொகை , வங்கி விவரங்கள் மற்றும் பணம் செலுத்துபவரின் கையெழுத்து ஆகியவை காசோலையில் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், கருப்பு மையால் எழுதிய காசோலை செல்லாது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், ஆர்பிஐ தற்போது காசோலை குறித்து புதிய விதியை வெளியிட்டுள்ளது. அதில், ”மோசடிகளை தடுக்கும் வகையில் கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலைகள் இந்த மாதம் முதல் செல்லாது என்றும், இனிமேல் நீலம் மற்றும் பச்சை மையால் எழுதப்பட்ட காசோலைகளை மட்டுமே வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்” என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. மேலும், கருப்பு மையால் எழுதினால் எழுத்துக்களை எளிதில் அழித்து விட முடியும் என்பதால் இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


























