இந்திய ரயில்வே துறையில் 11500+ காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு | முழுமையான தகவல்களுடன்!!
RAILWAY RECRUITMENT BOARD (RRB)ஆனது தொழில்நுட்பம் சாராத பிரிவில் உள்ள 11,558 பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழுள்ள பத்தியில் விரிவாக காணலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
RRB-ல் தொழில்நுட்பம் சாராத பிரிவில் உள்ள Station master, chief commercial cum ticket supervisor போன்ற 11,558 பல்வேறு காலிப்பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்ட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18-36 வரை இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் computer based test/document verification/ medical examination மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாத ஊதியம் ரூ.19,900-ரூ.35,400 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் RRB இணையதளமான www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் அக்டோபர் 13ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



























Dindigul