UPSC IFS தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு – உடனே பாருங்க!

0
UPSC IFS தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு - உடனே பாருங்க!
UPSC IFS தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு - உடனே பாருங்க!
UPSC IFS தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு – உடனே பாருங்க!

இந்திய வனப் பணி தேர்விற்கான நேர்காணல் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவர பட்டியலை UPSC வெளியிட்டுள்ளது.

இந்திய வனப் பணி:

இந்தியக் குடிமைப் பணிகளில் அடங்கிய இந்திய வனப் பணி தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 20 முதல் நவம்பர் 27 வரை நடைபெற்ற நிலையில் ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது தகுதியின் அடிப்படையில் தேர்வானவர்களின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதாவது, இந்திய வனத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களில் மொத்தமாக 147 பேர் வெவேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பட்டியலையும் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

 TNPSC GROUP 4 Online Test – Coaching Class Available @OFFER

அதாவது, பொது பிரிவில் 39 பேரும், பின்தங்கிய வகுப்பை சார்ந்த EWS பிரிவில் 21 பேரும், OBC பிரிவில் 54 பேரும், SC பிரிவில் 22 பேரும், ST பிரிவில் 11 பேரும் என மொத்தமாக 147 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுக்கான முடிவு மற்றும் தகவல் அறிய வேலை நாட்களில் காலை 10:00 மணிக்குள் 011-23385271, 011-23098543 மற்றும் 011-2338112 என்கிற தொலைபேசி எண்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், www.upsc.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!