
முதன் முறையாக தலிபான் அரசுடன் இந்திய அரசு பேச்சு.. அமைச்சர்கள் மத்தியில் நிகழ்ந்த உரையாடல்.. வெளியான முக்கிய தகவல்..!!
கடந்த 2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த நிலையில், இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தாலிபான் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஜாக்பாட் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
அதாவது, “இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் என இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் முதல் முறையாக இன்று (16-05-2025) உரையாடல் நிகழ்ந்தது. இந்த உரையாடலில், இந்திய அமைச்சர் ஜெய்சங்கரும் ஆப்கானிஸ்தான் அமைச்சர் மவ்லவி ஆமீர்கான் முத்தகி இருவரும் தொலைபேசி வாயிலாக பேசிய போது “பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததற்கும், ஆப்கனில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறிய பொய்யை அம்பலப்படுத்தியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்” என கூறப்படுகிறது.
























G
Good