TNPSC இந்திய அரசியலமைப்பு – அடிப்படை கடமைகள்

4
அடிப்படை கடமைகள்

அரசியலமைப்பை உருவாக்கிய நமது பெருமக்கள் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளை அரசியலமைப்பில் சேர்க்க தேவையில்லை என கருதினர்.

 • 1976-ம் ஆண்டு காங்கிரஸ் அமைச்சரவை சரண்சிங் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து அடிப்படைக் கடமைகள் குறித்து பரிந்துரையை கேட்டது.
 • காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் மத்திய அரசு இப்பரிந்துரையை ஏற்றது அதன்படி 1976-ம் ஆண்டு 42-வது திருத்தம் வாயிலாக IV A என்ற புதிய பகுதியை அரசியலமைப்பில் சேர்த்தது.
 • புதிய பகுதி 51A என்ற ஒரு சரத்தை மட்டும் கொண்டுள்ளது. இதில் 10 கடமைகள் சேர்க்கப்பட்டன. பின்பு 2002-ம் ஆண்டு மேலும் ஒரு அடிப்படைக் கடமை என்று சேர்க்கப்பட்டு தற்போது 11-ஆக திகழ்கிறது.

அடிப்படைக் கடமைகளின் முக்கியத்துவம்

 1. சில கடமைகள் தார்மீக கடமைகளாக திகழும்போது இதர கடமைகள் சிவில் கடமைகளாக திகழ்கின்றன.
 2. இதன் மதிப்புகளைச் சோதிக்கும்போது இவை இந்தியர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே திகழ்கின்றன.
 3. இக்கடமைகள் இந்திய குடிமக்களுக்கு மட்டும் பொருந்தும். அயல் நாட்டவருக்கு பொருந்தாது.
 4. அடிப்படைக் கடமைகள் மீறப்பட்டதற்காக நீதிமன்றம் வாயிலாக நிலைநாட்ட முடியாது. எனினும் பாராளுமன்றத்தின் மூலம் தேவையான சட்டங்களை இயற்றி செயல்படுத்தலாம்.
 5. அரசியலமைப்பின் முக்கியமான இப்பகுதி இன்று புறக்கணிக்கப்ப்டட பகுதியாகத் திகழ்கிறது.

அடிப்படைக் கடமைகள் (ஷரத்து – 51 A)

 • அரசியலமைப்புக்குக் கீழ்ப்படிந்து, அதன் நோக்கங்களையும், ஸ்தாபனங்களையும் மதிப்பதுடன் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் மதித்து நடத்தல்;
 • நமது சுதந்திரப் போராட்டத்திற்குத் தூண்டுபோலாக அமைந்த உன்னதமான நோக்கங்களைப் பேணிக்காத்து பின்பற்றி நடத்தல்;
 • இந்தியாவின் இறையாண்மையையும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையம் பேணிக்காத்தல்;
 • நாட்டைக் காப்பதுடன், தேவையான போது நாட்டு நலப்பணிகளையும் செய்தல்;
 • சமய, மொழி, வட்டார, பிரிவினை வேறுபாடுகளை எல்லாம் கடந்து இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதர உணர்வையும் நல்லிணக்கத்தையும் வளர்த்தல்; பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கின்ற செயல்களை விட்டொழித்தல்;
 • பல்வேறு கூறுகளுடைய நமது பண்பாட்டின் வளமான பாரம்பரியத்தை மதித்துப் போற்றிக் காத்தல்;
 • காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலை மேம்படுத்திப் பாதுகாத்தல், உயிரினங்களிடையே பரிவுடன் இருத்தல்;
 • அறிவியல் மனப்பாங்கு, மனிதாபிமானம், ஆராய்ச்சி உணர்வு, சீர்த்திருத்த மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்தல்;
 • பொதுச் சொத்தைப் பாதுகாத்தல்; வன்முறையை விட்டொழித்தல்;
 • தொடர்ச்சியாக நம் நாடு தன்னுடைய முயற்சியில் பல முன்னேற்றங்களைக் காணவும்,சாதனைகளைப் படைக்கவும் தனிமனித மற்றும் கூட்டு முயற்சிகள் அனைத்திலும் திறமையை வளர்க்கப் பாடுபடுதல்;
 • 14 – வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை பெற்றோர்களும், காப்பாளர்களும் வழங்கவேண்டும் என்கிறது. இந்த கடமை 2002-ம் ஆண்டு 86-வது சட்டதிருத்தம் வாயிலாக சேர்க்கப்பட்டது. இவையாவும் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அடிப்படைக் கடமைகளின் முக்கியத்துவம்

 • உரிமைகளை அனுபவித்து வருகிற அதே வேளையில், தமது கடமைகளைக் குடிமக்களுக்கு நினைவுபடுத்துபவையாக அவை பயன்படுகின்றன.
 • தேச விரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான எச்சரிக்கையாக அவை பணியாற்றுகின்றன.
 • குடிமக்களுக்கு உத்வேகமூட்டுகிற மூலவளங்களாக அவை பயன்படுவதுடன், அவர்களுக்கு நடுவே ஒரு ஒழுங்குக் கட்டுப்பாட்டையும் பற்றுறுதியையும் முன்னெடுத்துச் செல்கின்றன.
 • ஒரு சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வமான செல்லத்தக்க தன்மையை ஆய்வு செய்யவும், அதை நிர்ணயகரமாகத் தீர்மானிக்கவும் நீதிமன்றங்களுக்கு அவை உதவுகின்றன.
 • அவை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படக் கூடியவை. ஆகவே, அக்கடமைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றத் தவறுகிறவர்களுக்குப் பொருத்தமான அபராதம் அல்லது தண்டனையை விதித்து நாடாளுமன்றம் சட்டமியற்ற முடியும்.

PDF Download

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!