நெறிமுறை கோட்பாடுகள்
நெறிமுறைக் கோட்பாடு என்பது அறிவுறுத்தலுக்கான உபகரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அறிவுறுத்தலானது சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்துறைக்கு உரியது. எவரெல்லாம் சட்டமன்றத்தில் அவர்கள் விரும்பிய வண்ணம் செயலாற்ற முடியாமல் போகிறதோ அவர்கள் இந்த உபகரத்தின் அறிவுறுத்தல்களை மதித்து அதன்படி செயலாற்ற வேண்டும். இதுவே நெறிமுறைக் கோட்பாடு ஆகும். – B.R. அம்பேத்கார் – அரசியலமைப்பு மன்றம்
இந்தியா – ஒரு நல அரசு:
- அரசாங்கத்தின் கருதுகோள் என்னவெனில், தனது குடிமக்களின் பாதுகாப்பது மற்றும் முன்னெடுத்துச் செல்வதில் அரசு ஒரு மிக முக்கியப் பங்கு பாத்திரத்தினை வகிக்கிறது என்பதாகும்.
- ஒரு மக்கள் நல அரசு, வாய்ப்புகளில் சமத்துவம் மற்றும் செல்வத்தைச் சமச்சீரான முறையில் விநியோகிப்பது ஆகிய கொள்கைகளின் அடித்தளத்தில் அமைந்ததே.
- ஒரு நல்ல வாழ்க்கையின் குறைந்த பட்ச வசதிகளைக் கூட தாங்களாகப் பெற்று அனுபவிக்க முடியாத மக்களுக்காகவும் பொறுப்பு வகிக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு என்ற கருதுகோளின் மீதும் அரசு கவனங்குவிக்கிறது.
- இந்த அமைப்பின் கீழ், தனது குடிமக்களின் நலவாழ்வு என்பது அரசினுடைய பொறுப்பாக ஆகிறது. சுதந்திரத்திற்கு முன்பு இந்தியா ஒரு மக்கள் நல அரசல்ல.
- மக்களின் நலவாழ்வைப் பாதுகாப்பதிலோ அதை மேலும் முன்னெடுத்துச் செல்வதிலோ பிரிட்டிஷ் அரசாட்சி அப்படி ஒன்றும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
- அந்த அரசு என்ன செய்ததோ அதையெல்லாம் பிரிட்டிஷ் காலனிய அரசாங்கத்தின் நலன்களுக்குத் தேவைப்பட்ட அளவிற்கு மட்டுமே செய்ததேயன்றி, இந்தியாவின் மக்களுடைய நலன்களை முன்னிறுத்திச் செய்யவில்லை.
- இந்தியா சுதந்திரத்தை அடைந்த போது, அது எண்ணற்ற பிரச்சனைகளையும், சவால்களையும் தன்னிடத்தே கொண்டிருந்தது. சமூக மற்றும் பொருளாதார அசமத்துவம் எங்கு நோக்கினும் பரந்து விரிந்து நிலவி வந்தது.
- அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், பிரச்சனைகள் அனைத்தையும் மிக நன்றாக உணர்ந்திருந்தார்கள். அதன் காரணமாகத்தான், இந்தியா ஒரு மக்கள் நல அரசாக விளங்க வேண்டுமென்று, அவர்கள் தீர்மானித்தார்கள்.
- இந்திய அரசியல் சட்டத்தில், நீங்கள், கட்டாயம் பார்த்திருக்க வேண்டும்; அதன் முன்னுரையிலேயே, இந்தியா ஓர் “இறையாண்மையுள்ள”, சமதர்ம மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசு” என்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.
- அதன்படியே, இந்தியாவின் மக்களுடைய சமூக மற்றும் பொருளாதார நலவாழ்வை உறுதிப்படுத்துவதற்கு அரசியல் சட்டம் மிக விரிவடைந்த விதிகளைக் கொண்டுள்ளது.
- இது தொடர்பாக, இரண்டு குறிப்பான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன:
- ஒன்று, அடிப்படை உரிமைகளின் வடிவத்தில்;
- மற்றொன்று அரசுக் கொள்கையின் வழிகாட்டி நெறியின் வடிவத்தில் அமைந்துள்ளன.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி – மூன்றில் இடம பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் பிரிவு, அனைத்து இந்திய குடிமக்களும் குடிமைச் சுதந்திரங்களையும், அடிப்படை உரிமைகளையும் பெற்றிருக்கலாம்; கட்டாயம் அனுபவிக்க முடியும் என்பதற்கு உத்தரவாதமளிப்பதாகச் செயல்படுகிறது.
- இந்த மக்கள் சுதந்திரங்குளம், உரிமைகளும் நாட்டின் வேறெந்த ஒரு சட்டத்திற்கும் மேலாக முன்னிலையிடம் பெற்றிருப்பவையாகும். இவை தனிமனித உரிமைபள்; தாராளவாத ஜனநாயகங்களின் அரசியலமைப்புச் சட்டங்களில் பொதுவாக இடம் பெற்றிருப்பவையாகும்.
- ஆனால், இது போதுமானதல்ல் இந்தியக் குடிமக்கள், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புகளையும் பெற்றாக வேண்டிய தேவையுள்ளவர்கள்.
- அதன் காரணமாகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், அரசுக் கொள்கையின் வழிகாட்டி நெறிகள் அடங்கிய நான்காவது பகுதி உள்ளிணைக்கப்பட்டுள்ளது.
அரசிற்கு வழிகாட்டும் கொள்கைகள்
- பகுதி IV- ல் ஷரத்து 36 முதல் 51 வரை அமைந்துள்ளது.
- அயர்லாந்து அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
- Dr.B.R. அம்பேத்கார் இதனை இந்திய அரசியலமைப்பின் “புதுவகையான முக்கியத்துவம்” என குறிப்பிடுகிறார்.
- நெறிமுறைக் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகிய இரண்டும் இந்திய அரசியலமைப்பின் தத்துவார்த்தமான பகுதிகள் மற்றும் ஆன்மா நிறைந்த பகுதிகளாகும்.
- நல அரசு கோட்பாட்டை இப்பகுதி வலியுறுத்துகிறது.
- இப்பகுதி நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மக்காளட்சி கோட்பாட்டை நிலைநிறுத்துகிறது.
- இக்கோட்டுகளை மீறினால் நீதிமன்றம் மூலம் தீர்வு பெற இயலாது.
- நெறிமுறைக் கோட்பாடு மற்றும் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என கிரான்வில்லி அஸ்டின் (Granville Austin) குறிப்பிடுகிறார்.
நெறிமுறைக் கோட்பாடுகளின் முக்கியத்துவம்
- அரசாங்கமானது மக்கள் நலனிற்காக கொள்கைகளை வகுக்கும் போதும் சட்டங்களைச் செயல்படுத்தும் போதும் நெறிமுறைக் கோட்பாட்டின் லட்சியங்களை பூர்த்தி செய்யும் வண்ணம் செயல்பட வேண்டும். இது அரசியலமைப்பின் அறிவுறுத்தலாகும் அல்லது நாட்டின் சட்டமன்றம், நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை அங்கங்களுக்கு பரிந்துரைப்பதாகும்.
- நவீன மக்கள் நல அரசின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இவைகள் நாட்டில் பொருளாதார சமூக மக்களாட்சியை நிலை நிறுத்துவதாக அமைய வேண்டும்.
- இக்கோட்பாடுகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற இயலாது. மேலும் நீதிமன்றம் வாயிலாக சட்டப்படி செயல்பட வலியுறுத்த இயலாது. எனினும் நாட்டின் அரசாங்க செயல்பாட்டில் இந்த நெறிமுறைகள் அடிப்படையானதாகும். மேலும் அரசாங்கம் உருவாக்கும் சட்டங்களில் இந்த நெறிமுறைக் கோட்பாட்டினை உட்புகுத்துவது அதன் கடமையாகும்.
- நெறிமுறைக் கோட்பாடானது நீதிமன்றத் தீர்வு பெற முடியாவிட்டாலும் அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடியாகும் தன்மை குறித்து சோதிப்பதற்கும் மற்றும் தீர்மானிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அடிப்படை உரிமைகள் மற்றும் நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள்
இவை எதிர்மறை தன்மை கொண்டவை; அரசுகள் சிலவற்றைசெய்யக் கூடாது என்கிறது. | இவை நேர்மறை தன்மை கொண்டவை அரசுகள் சிலவற்றை செய்யவேண்டும் என்கிறது. |
நீதிமன்றம் வாயிலாக தீர்வுகாணக் கூடியவை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறமுடியும் | நீதிமன்றம் வாயிலாக தீர்வு காண இயலாது இவற்றை மீறினால் நீதிமன்றம் மூலம் நிலைநாட்ட இயலாது. |
இதன் நோக்கம் நாட்டில் அரசியல் மக்களாட்சியை நிறுவுதல் | இதன் நோக்கம் நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மக்காளட்சியை நிறுவுதல். |
சட்ட அங்கீகாரம் உடையது. | நீதி மற்றும் அரசியல் அங்கீகாரம் உடையது. |
தனிநபர் நல மேம்பாட்டை போற்றுகிறது மேலும் தனிநபரின் தனிப்பட்ட மற்றும் தனித்துவத்தை உயர்த்துகிறது. | சமுதாய நல மேம்பாட்டை போற்றுகிறது மேலும் சமுதாய அமைப்புகள் மற்றும் சமூக சமத்துவத்தை உயர்த்துகிறது. |
இவற்றை செயல்படுத்த எவ்வித சட்டங்களும் தேவையில்லை. இவை தன்னிச்சையாகவே செயல்படக்கூடியவை. | இவற்றை செயல்படுத்த சட்டங்கள் இயற்ற வேண்டும். மேலும் இவை தன்னிச்சையாக செயல்படாது. |
அடிப்படை உரிமைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டால் நீதிமன்றம் அவற்றை அரசியலமைப்பு தன்மை கொண்டது. இல்லை என்றும் செல்லத்தக்கவை அல்ல என்றும் கூறிவிடும். | நெறிமுறை கோட்பாட்டிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டால் நீதிமன்றத்தால் அரசியலமைப்பை மீறியதாகவும், செல்லத்தக்கவை அல்ல என்றும் அறிவிக்க இயலாது இருப்பினும் சட்டத்தின் செயல்பாட்டு விளைவுகளை பொறுத்து அதன் செயல் தன்மையை உறுதிசெய்யும். |
நெறிமுறைக் கோட்டின் வகைப்பாடு
நமது அரசியலமைப்பு நெறி முறைக் கோட்பாட்டை எவ்விதத்திலும் வகைப்படுத்தவில்லை இருப்பினும் அதன் உள்ளடக்கம் மற்றும் கோட்பாட்டின் அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது அவைகளாவன. சோசலிசம், காந்தீயம் மற்றும் சுதந்திர அறிவுசார்ந்த கோட்பாடுகளாகும்.
சோசலிசக் கோட்பாடு
- உண்மையான நல அரசு ஒன்றை உருவாக்கும் நோக்கத்திலேயே நெறிமுறைக்கோட்பாடுகள் அமைந்துள்ளன. அத்துடன் பொருளாதாரச் சுரண்லுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும், சமத்துவமின்மைக்கும் முடிவுகட்டி நியாயமான சமூக அமைப்பு சுமத்துகிறது. மக்கள் அனைவருக்கும் சமூக பொருளாதார அரசியல் நீதி கிடைக்கக் கூடியதான சமுதாய அமைப்பினை உருவாக்கி நல அரசை உருவாக்க முயல வேண்டும். ஷரத்து 38.
- ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியம் கிடைத்தல்
- ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதன் மூலம் சமமான நீதி முறையை ஏற்படுத்துவது சரத்து 39A
- அரசின் பொருளாதாரத் திறனுக்கும் வளர்ச்சிக்கும் உட்பட்டு வேலை செய்யும் உரிமையையும், கல்வி பெறும் உரிமையையும் வழங்கவும், வேலையில்லாத நிலையில் முதுமையில் நோயுற்றபோதும் – இயலாத சூழ்நிலைகளில் அரசின் உதவியை வழங்கவும் முயலவேண்டும், என சரத்து 41 கூறுகிறது.
- மனிதாபிமான வேலைச்சூழல் அமைய, பேறுகாலச் சலுகை கிடைக்க சரத்து 42 வகை செய்கிறது.
- ஊட்டசத்து அளவை உயர்த்தி, வாழ்க்கைத் தரத்தையும் பொது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது அரசின் கடமை என சரத்து 47 கூறுகிறது.
காந்தீய கோட்பாடுகள்
- காந்தீய சிந்தனைகளின் அடிப்படையில் இக்கோட்பாடு அமைந்துள்ளது.
- கிராமப் பஞ்சாயத்துக்களை அமைத்தல் – சரத்து 40
- கிராமப் புறங்களில் தனிநபர் அல்லது கூட்டுறவு முறையில் குடிசைத் தொழில்களை மேம்படுத்துதல் – ஷரத்து 43
- உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்யக்கூடிய மதுவகை மற்றும் போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தடுத்தல் – சரத்து 47
- பசுவதையை தடுத்தல். கன்றுகள் மற்றும் பால் தரும் பசுக்கள், தீவனம் இன்றி வாடும் கால்நடைகளின் நலன்களை பேணுதல் – சரத்து 48
சுதந்திரமான அறிவுசார்ந்த கோட்பாடு
- சுதந்திரப் போராட்ட கால சிந்தனைகளை உள்ளடக்கிய கோட்பாடாகும்.
- நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வருதல் – சரத்து 44
- ஆறு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வியளிப்பது – சரத்து 45
- நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை பிரித்தல் – சரத்து 50
அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக சேர்க்கப்பட்ட நெறிமுறை கோட்பாடுகள்
- 1976-ம் ஆண்டு 42-வது சட்டதிருத்தம் வாயிலாக 4-புதிய நெறிமுறை கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளாவன
- சரத்து 39 – குழந்தைகளின் மேம்பாட்டிற்கு வாய்ப்புகளை உருவாக்குதல்
- சரத்து 39A – ஏழைகளுக்கு சமமான நீதி மற்றும் இலவச சட்ட உதவி
- சரத்து 43A – தொழிற்சாலைகளின் நிர்வாகத்தில் தொழிலாளர்களும் பங்கெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
- சரத்து 48A – சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்படுவதுடன், காடுகளும் வன விலங்குகளும் பேணிக்காக்கப்பட வேண்டும்.
- 1978-ம் ஆண்டு 44-வது சட்டதிருத்தம் வாயிலாக மேலும் ஒரு நெறிமுறை கோட்பாடு சேர்க்கப்பட்டது.
- பல்வேறு மக்கள் பிரிவுகளுக்கு இடையே அந்தஸ்திலும் சலுகைகளிலும் வாய்ப்புகளிலும், வருமானத்திலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க அரசு முயல வேண்டும் என ஷரத்து 38-ல் சேர்க்கப்பட்டுள்ளது.
- 2002-ம் ஆண்டு 86-வது திருத்தம் வாயிலாக ஷரத்து 45-ன் உள்ளடக்கம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆரம்ப கல்வி அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டு ஷரத்து 21A புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இச்சட்டதிருத்தின் படி அரசானது ஆறு வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளின் நலன் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அரசுக் கொள்கையின் வழிகாட்டி நெறிகளை நடைமுறைப்படுத்துதல்:
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டி நெறிகளுள் சில:
- அனேகமாக, வேலைவாய்ப்பு என்பதன் அனைத்துக் களங்களிலும் குறைந்த பட்ச ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டு விட்டன.
- ஆண் – பெண் இருபாலருக்கும் சம வேலைக்கு சம ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளன.
- கிராமப்புற வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் மற்றும் ஸ்வர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கார் யோஜனா – போன்றவை எடுத்துக்காட்டுகள்.
- பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்கு அரசியல் சட்ட பூர்வமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கிராம மட்டத்தில் கிராம ஊராட்சிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டும் வருகின்றன.
- எண்பத்தி ஆறாவது அரசியல் சட்டத் திருத்தம், குழந்தைகளுக்கு இலவச,கட்டாயக் கல்வி அளிப்பதற்கான விதியை உறுதிப்படுத்தவதற்காக ஏற்பளிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டில் கல்விக்கான உரிமைச் சட்டம், கல்வியை அடிப்படை உரிமையாக்கும் பொருட்டு நிறைவேற்றப்பட்டது.
- சுரண்டலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பல சட்டங்கள் நிலைவேற்றப்பட்டுள்ளன.
- ஏழைகள், பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பட்டியலின சாதியினர், பட்டியலின பழங்குடி மக்கள் ஆகியோருக்காக எண்ணற்ற நலத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் அவர்களுக்காக இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
- சுரண்டலில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கு ஏராளமான சட்டங்களும், நலத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- நாற்பத்தி இரண்டாவது அரசியல் சட்டத் திருத்தம் ஒரு வழிகாட்டி நெறியைக் கூடுலாகச் சேர்த்துள்ளது. சுற்றுச்சூழலின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் மற்றும் காடுகள் மற்றும் வனங்கள் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காகவும் – உறுதிப்படுத்துதலை இது செய்கிறது. காண்டாமிருகங்கள், யானைகள் திட்டம், புலிகளைக் காப்போம் திட்டம் போன்ற பல திட்டங்கள், மேற்கண்ட இந்தப் புதிய, கூடுலாகச் சேர்க்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிக்கிணங்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. நிர்வாக இயந்திரத்திலிருந்து நீதித்துறை தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- வரிச்சலுகை வழங்குவதன் மூலம் குடிசைத் தொழில்கள் நிறுவப்பட்டு, பாதுகாக்கவும் படுகின்றன.
- நமது வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் கொள்கைகளுடன் உடன்பாடுடையதாக அமைந்திருப்பதுடன் நாடுகளுக்கிடையே நீதியான மற்றும் மேன்மை மிக்க உறவுகளைப் பராமரித்து வருகிறது.
- இந்த அரசாங்கம், உலக அமைதியை ஆதரிப்பமுடன் அதற்காகப் பணியாற்றவும் செய்கிறது.
- மேற்கண்டவற்றைக் காணும் போது, மத்திய, மாநில மற்றும் உள்ளுர் மட்டங்களில் உள்ள அரசாங்கங்கள், வழிகாட்டி நெறிகளை நடைமுறைப்படுத்துவதற்காகப் பணியாற்றுகின்றன என்பது தெளிவாகும். ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், வறுமை – வேலையில்லாத் திண்டாட்டம் – மற்றும் மோசமான சுகாதாரம், கல்வியறிவின்னை போன்ற பிரச்சனைகள் இன்னமும் நீடிக்கவே செய்கின்றன.
- வழிகாட்டி நெறிகளின் ஆன்மா என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே ஆகும். இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை; இன்னும் பல சவால்கள் எதிர் கொண்டிருக்கின்றன.
- வழிகாட்டி நெறிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முழுமையான எதிர்வினையைக் கோருபவையாக இவை உள்ளன.
- திட்டக் கமிஷன் – 1950
- பேறுகால உதவிச் சட்டம் – 1951
- சமமான ஊதியச்சட்டம் – 1976
- ஆயுள் காப்பீட்டை தேசியமயமாக்கியது – 1956
- 14 தேசிய வங்கிகளை தேசியமயமாக்கியது – 1969
- பொதுக் காப்பீட்டை தேசியமயமாக்கியது – 1971
- மன்னர் மானியங்களை ஒழித்தது – 1971.
PDF Download
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Facebook Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும
Telegram Channel கிளிக் செய்யவும்
Thanks you