IND vs SL 2024: வெற்றியுடன் தொடரை துவங்குமா இந்தியா?? இன்று இலங்கையுடன் பலப்பரீட்சை!!

0
IND vs SL 2024: வெற்றியுடன் தொடரை துவங்குமா இந்தியா?? இன்று இலங்கையுடன் பலப்பரீட்சை!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற உள்ளது. முன்னதாக T20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. T20 தொடரில் காயம்பட்ட இலங்கை அணி, பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்த்து மீண்டும் விளையாட இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த இரு அணி வீரர்களும் சிறப்பான பார்மில் உள்ளதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இது வரை நடந்த சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இலங்கை, இந்தியா அணிகள் 168 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் இந்தியா 99 முறை வென்றுள்ளது. இலங்கை 57 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி சமனிலும், 11 போட்டி மழையாலும் கைவிடப்பட்டது. இப்போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு ஆர். பிரேமதாசா மைதானத்தில் துவங்க உள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்பா ? – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!