
டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு.. அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் இந்தியா.. நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக நாடுகளிடையே அமெரிக்காவின் பொருளாதார நிலையை முன்னிலை படுத்த மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் இறக்குமதி பொருட்களின் சேவைகளுக்கு அதிக வரி விதித்தார். அதன்படி இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது 26% பரஸ்பர வரி விதித்த டிரம்பின் அறிவிப்பு 90 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு குறித்து அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும், இதற்கான முதல்கட்ட ஒப்பந்தம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் கையொப்பமாக வாய்ப்புள்ளதாகத் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட் நாளிதழில், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் பேசியது, “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

























