
அய்யோ…! “உலக மக்கள் தொகையில் சீனாவை விட இந்தியா முதலிடமா..?? எவ்ளோ அதிகமாயிருக்குனு பாப்போமா மக்களே…!! “
உலக மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையை குறிப்பதாகும். அந்த வகையில், 1950 ஆம் ஆண்டு ஐ .நா. மக்கள் தொகை நிதி அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மக்கள் தொகை 86.1 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், சீனா 114.4 கோடியுடன் முதலிடத்திலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 74 வருடங்களாக சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஐ .நா. வெளியிட்ட ஆய்வறிக்கையில், உலகின் மொத்த மக்கள் தொகை 809 கோடியாக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 141 கோடி மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

























