மக்களே..! “புத்தாண்டில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபத்தை பெற முத்து முத்தான  5  திட்டங்கள்…!!” மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க…

0
??????..! "???????????? ?????? ??????? ?????? ???? ??????? ??? ?????? ???????  5  ??????????...!!" ???? ?????? ???????????????...
மக்களே..! "புத்தாண்டில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபத்தை பெற முத்து முத்தான  5  திட்டங்கள்...!!" மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க...

மக்களே..! “புத்தாண்டில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபத்தை பெற முத்து முத்தான  5  திட்டங்கள்…!!” மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க…

 

முதலீடு என்றால் நமக்கு முதலில் நியாபகம் வருவது வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வது தான்.  அதேபோல் அரசின் பாதுகாப்பு முறைகளை உள்ளடக்கிய அதிக லாபம் தரக்கூடிய 5 முக்கியமான குறுகிய கால முதலீடுகள் பற்றி விரிவாக கீழே காண்போம்.

பிக்சட் டெபாசிட்கள்: பிக்சட் டெபாசிட்கள் என்பது வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஒரு நிரந்தர வைப்பு கணக்கு ஆகும்.  இதில் முதலீட்டாளர்களுக்கு 7 அல்லது 10 ஆண்டுகள் வரையிலான கால அளவு கொண்ட பிக்சட் டெபாசிட்கள் வழங்குகின்றன.  மேலும் இதற்கான வட்டி விகிதங்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் பொறுத்து மாறுபடும்.

கார்ப்பரேட் பிக்சட் டெபாசிட்கள்: கார்ப்பரேட் பிக்சட் டெபாசிட்கள் என்பது வங்கிகளில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட்கள் போலவே தனியார் நிதி நிறுவனங்களால் 1 அல்லது 5 ஆண்டுகள் முதலீடு செய்யும் திட்டமாகும். இதற்கு 9.25% முதல் 10.75% வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. அதோடு ஒரு நிறுவனம் பிக்சட் டெபாசிட்களை வழங்குகிறது என்றால், அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

ரெக்கரிங் டெபாசிட்கள்: தொடர் வைப்பு நிதி என்று அழைக்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் என்பது மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சமாக ரூ.100  என்ற தவணையில் செலுத்தி இத் திட்டத்தில் இணையலாம். இதில் குறைந்தபட்சம் 12 மாதம் முதல் அதிகபட்சம் 120 மாதம் வரை டெபாசிட் செய்யலாம்.  மேலும் இத்திட்டத்தில் சேர்ந்து பின் பணம் தேவைப்பட்டால், முதலீடு செய்யப்பட்ட 90% பணம் கடன்  அல்லது ஓவர் டிராப்ட் ஆக பெறலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகள்: மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை தரும் முதலீட்டு திட்டமாகும். இது பல முதலீட்டாளர்களிடம் பத்திரங்களை வாங்குவதற்காக பணத்தை சேகரிக்கும் நிறுவனம் ஆகும். மேலும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதை தெரிந்து முதலீடு செய்வது நல்லது.

SIP திட்டம்: மியூச்சுவல் ஃபண்டுகளின் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் ரெக்கரிங் டெபாசிட்கள் போலவே நாம் நிர்வகித்த தொகையை மாதந்தோறும் முதலீடு செய்யும் திட்டம் ஆகும். மேலும் இத்திட்டம் மூலம்  மாதம் ஒரு முறை, காலாண்டுக்கு ஒருமுறை மற்றும் அரை ஆண்டிற்கு ஒருமுறை என்ற கால அளவில் முதலீடு செய்யலாம். இதற்கு முறையான கூட்டு வட்டி அளிப்பதால் காலப்போக்கில் உங்களுடைய வருமானம் கணிசமாக கூடலாம்.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!