இந்தியாவில் தொடர்ந்து குறையும் கேஸ் சிலிண்டர் விலை.. – நிம்மதியில் மக்கள்!

0
இந்தியாவில் தொடர்ந்து குறையும் கேஸ் சிலிண்டர் விலை.. - நிம்மதியில் மக்கள்!
இந்தியாவில் தொடர்ந்து குறையும் கேஸ் சிலிண்டர் விலை.. - நிம்மதியில் மக்கள்!
இந்தியாவில் தொடர்ந்து குறையும் கேஸ் சிலிண்டர் விலை.. – நிம்மதியில் மக்கள்!

இந்தியாவில் இந்த மாதம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை நிலவரம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூ. 157.50 குறைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கேஸ் சிலிண்டர் விலை:

நாடு முழுவதும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்யும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான புதிய விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை தொடர்ந்து 6வது மாதமாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், இந்த மாதம் உபயோக சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது. இது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மெட்ரோ ரயில் பயணிகளுக்கான சூப்பர் சேவை – இவ்வளவு குறைவான செலவில் ஆட்டோவா?

அதே போல இந்த மாதம் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.157.50 குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 1695 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1,118.50க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை தற்போது ரூ.200 குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதியில் இருக்கின்றனர். அதே போல சென்னையில் கடந்த மாதம் ரூ.1,852.50க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகளும் நிம்மதியில் இருக்கின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!