சதம் அடித்த சுப்மன் கில் – இந்தியா அபார வெற்றி!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது துபாயில் நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறிய நிலையில், தௌகித் ஹிரிடாய் மற்றும் ஜேக்கர் அலி ஜோடி சேர்ந்தனர். ஜேக்கர் அலி 114 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் தௌகித் ஹிரிடாய் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரூ.2 லட்சம் FD-யில் 12 மாதம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? உடனே தெரிஞ்சுக்கோங்க!
வங்காளதேசம் அணி ஆனது 49.4 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 228 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் திரட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 129 பந்துகளில் 101 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.























