ஆசியக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கையை வெல்லுமா இந்தியா? – பரபரப்புடன் ரசிகர்கள்!
செப்டம்பர் 17ம் தேதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணியினர் மோதிக் கொள்ள இருக்கும் நிலையில் இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கிரிக்கெட் தொடர்:
பதினாறாவது ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டது. இந்தப் போட்டியின் கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள இந்தியா மற்றும் இலங்கை அணியினர் செப்டம்பர் 17ம் தேதி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதிக் கொள்ள இருக்கின்றனர்.
TNPSC குரூப் 2 தேர்வில் ஜெயிக்க இத மட்டும் செய்தால் போதும் – என்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க!
இந்நிலையில், இலங்கையை வெல்லுமா இந்தியா என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், தொடர்ந்து 13 முறை வென்று இலங்கை ஆசியக்கோப்பை கடைசிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் இந்தியாவை வெற்றி பெறுமா என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கடைசி ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை தோற்கடித்து இந்திய அணி வெற்றி பெற்றதை போல கடைசி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.