2,000 டன்னுக்கு மேலாக கோதுமை கையிருப்பு வைக்க தடை – மத்திய அரசு உத்தரவு!

0
2,000 டன்னுக்கு மேலாக கோதுமை கையிருப்பு வைக்க தடை - மத்திய அரசு உத்தரவு!
2,000 டன்னுக்கு மேலாக கோதுமை கையிருப்பு வைக்க தடை - மத்திய அரசு உத்தரவு!
2,000 டன்னுக்கு மேலாக கோதுமை கையிருப்பு வைக்க தடை – மத்திய அரசு உத்தரவு!

மத்திய உணவு துறை அமைச்சகம் ஆனது நாட்டில் உள்ள வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை அங்காடிகள் ஆகியவை 2000 டன்னுக்கு அதிகமான கோதுமை கையிருப்பு வைத்திருக்கக் கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோதுமை கையிருப்பு:

கடந்த சில மாதங்களாக நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை ஆனது எதிர்பாராத வகையில் பல மடங்கு உயர்வை எட்டி உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக தக்காளி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி போன்ற காய்கறிகளின் விலையும், அதனை தொடர்ந்து அரிசி விலையும் உயரத் தொடங்கியது. காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை குறைந்த விலையில் மக்களின் பயன்பாட்டிற்கு விற்பனை செய்தது.

Follow our Instagram for more Latest Updates

இதே போல் அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட வகைகளை தவிர மற்ற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. இந்நிலையில் நாட்டில் உள்ள வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், விற்பனை அங்காடிகள் ஆகிய அனைத்து தரப்பும் 2000 டன் கோதுமைக்கு அதிகமாக கையிருப்பு வைத்திருக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசியக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கையை வெல்லுமா இந்தியா? – பரபரப்புடன் ரசிகர்கள்!

மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா அவர்கள் இது குறித்து, கடந்த ஆண்டு கோதுமை கையிருப்பு 3000 டன்னாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த அளவு 2000 டன்னாக குறைக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கோதுமை தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்த முயற்சிக்கும் நடவடிக்கை காரணமாக இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!