பேஸ் புக் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – உங்க Password மாத்துங்க.. வெளியான ஷாக் தகவல்!

0
பேஸ் புக் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - உங்க Password மாத்துங்க.. வெளியான ஷாக் தகவல்!
பேஸ் புக் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - உங்க Password மாத்துங்க.. வெளியான ஷாக் தகவல்!
பேஸ் புக் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – உங்க Password மாத்துங்க.. வெளியான ஷாக் தகவல்!

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக் உள்ளது. இந்த பேஸ் புக்கில் கணக்கு தொடங்குபவர்கள் தங்களின் கருத்துகள், புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மெட்டா நிறுவனம் தனது பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பேஸ் புக்:

உலகம் முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில் மோசடிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்மையில் சோவா என்ற தொழில்நுட்ப வைரஸ் குறித்த தகவல் வெளியானது. சோவா வைரஸ் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டு தரவுகளை திருட பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த வைரஸானது ஒருவரின் மொபைல் போனில் உள்ள தகவலை நேரடியாக ஹேக்கர்களுக்கு அனுப்பி வருகிறது. இதனை பயன்படுத்தி மோசடி நபர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து எளிதாக பணத்தை எடுத்து விடுகின்றனர்.

Exams Daily Mobile App Download

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளை குறி வைத்து இந்த வைரஸ் செயல்பட்டது. அதனால் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வார்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும் தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடந்து தற்போது பேஸ்புக் பயனாளர்களின் கடவுச்சொல் திருடப்படுவதாக தகவல் வந்துள்ளது. நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முக்கிய சமூக வலைதள செயலியாக பேஸ் புக் உள்ளது. இதில் இதுவரை 10 லட்சத்திற்கு மேற்பட்ட பயனாளர்களின் கடவுச்சொல் திருடப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பணம் Deposit செய்தவர்களின் கவனத்திற்கு.. தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கி – அரசு அதிரடி!

இந்த கடவு சொல்லை கண்டறிந்து ஹேக்கர்கள் பிற பயனர்களின் கணக்கில் உள்நுழைந்து பேஸ்புக்கை ஹேக் செய்து விடுகின்றனர். இதுவரை 400-க்கும் மேற்பட்ட ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. இதனால் உங்கள் பேஸ்புக் கடவுச்சொல்லை பயன்படுத்தி பிற மொபைல் செயலிகள் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். உங்களது கடவுச்சொல் (password) களவு போயிருப்பதாக சந்தேகித்தால் பயனாளர்கள் கடவுச்சொல்லை மாற்றுமாறு மெட்டா அறிவுறுத்தி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!