பணம் Deposit செய்தவர்களின் கவனத்திற்கு.. தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கி – அரசு அதிரடி!

0
பணம் Deposit செய்தவர்களின் கவனத்திற்கு.. தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கி - அரசு அதிரடி!
பணம் Deposit செய்தவர்களின் கவனத்திற்கு.. தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கி - அரசு அதிரடி!
பணம் Deposit செய்தவர்களின் கவனத்திற்கு.. தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கி – அரசு அதிரடி!

நாடு முழுவதும் அதிக வராக் கடன் உள்ள வங்கிகளை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில், மத்திய அரசும், எல்.ஐ.சியும் இணைந்து ஐடிபிஐ வங்கியில் உள்ள 60.72 சதவீத பங்குகளை விற்று, வெற்றி பெறும் நிறுவனத்திற்கு நிர்வாக கட்டுப்பாட்டை மாற்ற முயற்சி செய்து வருகிறது.

ஐடிபிஐ வங்கி

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் வராக் கடன் நிலுவை அதிகமாக உள்ள வங்கிகளை தனியார் மயமாக்கல் செய்ய இருப்பதாக அண்மையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அந்த வகையில் ஐடிபிஐ வங்கியில் கடன் அளவு அதிகமாக இருந்ததால் மே 2017 முதல் மார்ச் 2021 வரை ரிசர்வ் வங்கியின் பிசிஏ எனும் உடனடி திருத்த நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் ஐடிபிஐ வங்கி கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் நிலைமை சரியானதை அடுத்து, ஐடிபிஐ வங்கியின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு வங்கியிலுள்ள பங்குகளை விற்கவும், நிர்வாகக் கட்டுப்பாட்டை மாற்றுவதற்கும் ஒப்புதல் வழங்கியது.

இந்த நிதியாண்டில் ஐடிபிஐ வங்கியின் விற்பனை நிறைவடைந்தால், மத்திய அரசு தனது பங்குகள் விற்பனை மூலம் திரட்ட உள்ள ரூ.65,000 கோடிக்கு பங்களிப்பு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்காக மத்திய அரசு ரூ.24,544 கோடியை திரட்டி இருக்கிறது. அதில் பெருபான்மையான பங்கு எல்.ஐ.சி.,யில் இருந்த பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்ட முதற்கட்ட தகவல் குறிப்பாணையின் படி, ஐடிபிஐ., வங்கியில் எல்ஐசி நிறுவனம் 49.24% பங்குகளை வைத்துள்ளது.

அமலுக்கு வந்த அகவிலைப்படி உயர்வு – அரசு ஊழியர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!

Exams Daily Mobile App Download

அதில் 30.24% பங்குகளை விற்கிறது. மத்திய அரசு தனக்கு சொந்தமான 45.48% பங்குகளில் 30.48% பங்குகளை விற்க இருக்கிறது. அதில் 5.28% பங்குகள் பொதுமக்களிடம் உள்ளது. இந்நிலையில் வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் ஏலங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 16 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஏலம் எடுக்கும் நிறுவனம் குறைந்தபட்ச நிகர மதிப்பாக ரூ.22,500 கோடி வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐடிபிஐ வங்கியை ஏலம் எடுக்க தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், செபியில் பதிவு செய்யப்பட்ட மாற்று முதலீட்டு பண்ட்கள் ஆகியவை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!