
மகப்பேறு விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – சம்பளத்தை திரும்ப வழங்க அறிவுறுத்தல்!
கோடை விடுமுறையில் குழந்தை பெற்ற ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் இந்த கோடை விடுமுறை காலத்தை சேர்க்காவிட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்டிற்கும் சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு:
கேரளா மாநிலத்தில் மகப்பேறு விடுப்பாக 6 வாரம் வழங்கப்படுகிறது. மேலும், ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பு எடுப்பதற்கு முன்பாகவே மகப்பேறு விடுப்பு தொடர்பான கணக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், மகப்பேறு விடுப்பு எடுப்பதற்கு முன்பாகவே விடுப்புக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும், பள்ளி தலைமையாசிரியருக்கு வழங்கப்படும் விடுப்பில் பிரசவ தேதியும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அப்டேட் – எமோஜி கீபோர்டில் மாற்றம்!
மேலும், பிரசவ தேதியை குறிப்பிட்ட பிறகு உடனடியாக ஆசிரியர்கள் மகப்பேறு எடுத்துக் கொள்ளலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கோடை விடுமுறையில் குழந்தை பெற்ற ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் கட்டாயமாக இந்த கோடை காலத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், இந்த கோடை காலத்தை சேர்க்காவிட்டால் ஆசிரியர்களின் சம்பளத்தை திரும்ப செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறையில் குழந்தை பெற்றவர்கள் மற்றும் கோடை விடுமுறையில் மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களிடம் இந்த மாதத்தில் இருந்து மகப்பேறு விடுப்பிற்கான தொகை வசூல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.