முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-03
மு.கருணாநிதி பிறந்த தினம்
பிறப்பு:
- ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் பிறந்தார்.
இயற்பெயர்: தட்சிணாமூர்த்தி
சிறப்பு:
- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார்.
- 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார்.
- மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
- கருணாநிதி தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார்.
- இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார் பின் அவ்வமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகம்” என்ற அமைப்பாக உருபெற்றது.
- 1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அக்டோபர் 13, 1957 நாளை இந்தி எதிர்ப்பு நாளாக மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது.
- 1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.
- மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது.
நூல்கள்:
- குறளோவியம்
- நெஞ்சுக்கு நீதி
- தென்பாண்டி சிங்கம்
- இனியவை இருபது
- திருக்குறள் உரை
விருதுகள்:
- உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் இந்திய மாநிலமான தமிழகத்தின் முதல்வராக 2009ம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.
- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழத்தின் ராஜ ராஜன் விருதினை தென்பாண்டி சிங்கம் என்ற புத்தகத்திற்காக பெற்றார்.
நிகழ்வுகள்
- 1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.
- 1984 – அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.
பிறப்புகள்:
- 1931 – ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் 18வது அரசுத்தலைவர்.
- 1873 – ஒட்டோ லோவி நோபல் பரிசு பெற்ற செருமானிய அமெரிக்க மருந்தியலாளர், உயிரியலாளர்.
இறப்புகள்
- 1989 – ரூஃகூல்லா மூசவி கொமெய்னி ஈரானின் 1வது அரசுத்தலைவர்,ஆன்மிகத் தலைவர்.
- 1990 – ராபர்ட் நாய்சு இன்டெல் நிறுவனத்தை நிறுவிய அமெரிக்க தொழிலதிபர், இயற்பியலாளர்.
- 2011 – பஜன்லால் அரியாணாவின் 6வது முதலைமைச்சர்.
- 1977 – ஆர்ச்சிபால்ட் ஹில் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |