முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 13

0

சர்வதேச இடது கை பழக்கமுள்ளோர் தினம் 

 • இடது பழக்கமுள்ளவர்கள்  தனித்துவத்தையும் வேறுபாடுகளையும் கொண்டாட ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 அன்று சர்வதேச இடது கை பழக்கமுள்ளோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
 • இந்த நாள் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் லெஃப்டாண்டர்ஸ் இன்டர்நேஷனலின் நிறுவனர் டீன் ஆர். காம்ப்பெல் அவர்களால் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்வுகள்

 • 2004 – கறுப்பு வெள்ளி: மாலைதீவுகள் தலைநகர் மாலேயில் இடம்பெற்ற அமைதியான அரச எதிர்ப்புப் போராட்டம் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது.
 • 2004 – புருண்டியில் கடும்பா அகதிகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
 • 2004 – 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.
 • 2006 – யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்பு

டி. கே. மூர்த்தி

டி. கே. மூர்த்தி (T. K. Murthy பி: ஆகஸ்ட் 13, 1924) என பிரபலமாக அறியப்படும் டி. கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிருதங்ககலைஞர் ஆவார்.

இவரது முதலாவது கச்சேரி இவர் 10 வயதாக இருக்கும்போது இடம்பெற்றது. முசிரி சுப்பிரமணிய ஐயர் பாட்டுக்கு கரூர் சின்னசுவாமி ஐயர் வயலின் வாசிக்க இவரது குரு வைத்தியநாத ஐயருடன் சேர்ந்து மிருதங்கம் வாசித்தார்.

இவரது அடுத்த கச்சேரி மைசூர் அரண்மனையில் இடம் பெற்றது, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பாட்டுக்கு மைசூர் சௌடையா வயலின் வாசிக்க வைத்தியநாத ஐயர் மிருதங்கம் வாசித்தார். அப்போது நவராத்திரி விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் கச்சேரிகள் நடக்கும்.

விருதுகளும் சிறப்புகளும்

 • சங்கீத நாடக அகாதமி விருது, 1987 – வழங்கியது இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி
 • சங்கீத கலாநிதி விருது, 1994 – வழங்கியது சென்னை மியூசிக் அகாதமி
 • நந்தி நாத நிபுணர், 2009 – வழங்கியது ஸ்ரீ விக்னேஸ்வரா பண்பாடு அகாதமி, ராமாபுரம் சென்னை.

இறப்பு

புளோரன்ஸ் நைட்டிங்கேல்

புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale, மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நவீன தாதியியல்முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.

சிறப்பு நாள்

 • பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்
 • விடுதலை நாள் (மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, பிரான்சிடம் இருந்து 1960)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!