மின் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – போதிய வைப்புத்தொகை கட்டாயம்.. இல்லையெனில் அபராதம்!

0
மின் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - போதிய வைப்புத்தொகை கட்டாயம்.. இல்லையெனில் அபராதம்!
மின் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - போதிய வைப்புத்தொகை கட்டாயம்.. இல்லையெனில் அபராதம்!
மின் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – போதிய வைப்புத்தொகை கட்டாயம்.. இல்லையெனில் அபராதம்!

தமிழகத்தில் உயரழுத்த பிரிவில் மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் தங்களது கணக்கில் வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை பொறியாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இருப்புத்தொகை:

தமிழக மின் வாரியத்தில் இருந்து உயரழுத்த மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் தங்களது கணக்கில் 2 மடங்கு தொகையை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தாழ்வழுத்த இணைப்பு கொண்டவர்கள் மின் கட்டணத்தில் 3 மடங்கு தொகையை முன்வைப்பு தொகையை வைத்திருக்க வேண்டும்.

SSC – CGL, CHSL, MTS தேர்வுகளில் கலந்து கொள்ள போகிறீர்களா? – OFFER விலையில் பயிற்சி வகுப்புகள்!

இத்தகைய இருப்பு தொகையை வைத்திருக்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் வாரியம் தலைமை பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. போதிய வைப்புத்தொகை இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட வேண்டும். நோட்டீஸ் அனுப்பி 30 நாட்களுக்கு பிறகும் வைப்புத்தொகையை செலுத்தாவிட்டால் மின் இணைப்பை துண்டிக்கலாம்.

மேலும் வைப்புத் தொகை குறித்த விவரங்களை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் வைப்பு தொகையை செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!