
மக்களே தயாராக இருந்துக்கோங்க.. தொடர்ந்து 2 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்..!!
கடந்த சில நாட்களாக தென்னிந்திய வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் பலத்த காற்று சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே தெரிவித்திருந்தது.
NLC நிறுவனத்தில் Junior Overman வேலை – 170+ காலிப்பணியிடங்கள் || ரூ.1,10,000/- ஊதியம்…!
இந்நிலையில் “தமிழகத்தில் இன்று (05-05-2025) மற்றும் நாளையும் (06-05-2025) ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் கவனமாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது”.
Join the ExamsDaily Whatsapp Group

























