50 ஓவர் உலக கோப்பை தொடருக்கான தீம் பாடல் வெளியீடு – ICC அறிவிப்பு!
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில் ICC உலக கோப்பைக்கான தீம் பாடலை வெளியிட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர்:
இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், பிசிசிஐ இணைந்து நடத்தும் ICC 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இந்திய அணியினர் தனது முதல் ஆட்டத்திலேயே ஆஸ்திரேலியா அணியுடன் மோத இருக்கின்றனர்.
அக். 9 தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம் – சபாநாயகர் அறிவிப்பு!
இதனிடையே, உலகக்கோப்பை தொடருக்கான 20 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், 16 பேர் அம்பயர்களாகவும், 4 பேர் மேட்ச் ரெப்ரீகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தீம் பாடலை ICC தற்போது வெளியிட்டுள்ளது.