ICC உலகக்கோப்பை 2023 அட்டவணை – ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடரை துவக்கும் இந்தியா!
நடப்பு ஆண்டு உலகக்கோப்பை ஆண்கள் போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ள நிலையில், தற்போது BCCI போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
ICC உலகக்கோப்பை 2023:
2023ம் ஆண்டுக்கான ICC ஆடவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளது. அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை மொத்தம் 46 நாட்கள் போட்டிகள் நடக்க உள்ளது. போட்டிகள் அனைத்தும் நாட்டில் உள்ள ஹைதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள 10 முக்கிய நகரங்களில் நடக்க உள்ளது. செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை பயிற்சி ஆட்டங்கள் கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
WHATSAPP ல் வந்தாச்சு புது அப்டேட் – இனி பயனர்களுக்கு ஹாப்பி தான்!
போட்டிக்கான இறுதி செய்யப்பட்ட அட்டவணை வழக்கமாக 100 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படுவது வழக்கம். இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான போட்டிகளின் அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 அணிகள் உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொள்கின்றன. உலக கோப்பை போட்டிகளை காண கிரிக்கெட் ரசிகர்கள் அதிக ஆவலோடு காத்திருக்க தொடங்கியுள்ளனர்.